Advertisment

IRCTC Train Booking Rules: ரயிலில் முழு கோச்சையும் ‘புக்’ செய்வதற்கான விதி இது தான்!

IRCTC Train, Coach Booking Rules Online: இந்த முழு கோச்சுக்கான முன்பதிவு அதிகபட்சமான 6 மாதத்திற்கு முன்பும், குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு முன்பும் செய்ய முடியும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாத்துக்கங்க மக்களே... இதுக்கெல்லாம் நாங்க பொறுப்பில்ல... கைவிரித்த ஐ.ஆர்.சி.டி.சி!

IRCTC Train Booking Rules, Charges Online: பயணங்களின் போது ரயிலில் உறுதிப்படுத்தப்பட்ட இருக்கை பெறுவதற்கு கணிசமான நேரம், திட்டமிடல் மற்றும் முயற்சி தேவை. ஆனால் நீங்கள் குழுவாகவோ அல்லது குடும்பத்தினருடனோ பயணம் செய்கிறீர்கள் என்றால், ஒருவருக்கொருவர் அருகில் அமர விரும்புவது இயல்பான ஒன்று. இதற்கு ஒரே கோச்சில் டிக்கெட் கிடைக்க வேண்டும். இது கொஞ்சம் சிரமமான ஒன்று. ஆனால் கவலை வேண்டாம், அதற்கான வழி இருக்கிறது.

Advertisment

ஐ.ஆர்.சி.டி.சி-யின் ரிசர்வேஷன் அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி அல்லது தலைமை ரிசர்வேஷன் மேற்பார்வையாளரைத் தொடர்புகொண்டு, அதிக பயணிகள் செல்ல ஒரு கோச்சை முன்பதிவு செய்யலாம். மொத்தமாக செய்யப்படும், இந்த முன்பதிவுகள் கணினிமயமாக்கப்பட்ட ரிசர்வேஷன் முறையில் 10.00 மணி நேரத்திற்குப் பிறகு கிடைக்கும்.

ஒரு சுற்றுப்பயண நிகழ்ச்சியில் ஒரு ரயிலில் முழு கட்டண விகிதத்தில் (எஃப்.டி.ஆர்) அதிகபட்சம் 10 பயிற்சியாளர்களை ஒரு குழு பதிவு செய்யலாம். ஒரு சுற்றுலா பயணத்தில் ஒரு ரயியிலில் அதிக பட்சமாக, 10 கோச்களை முழு கட்டணத்தால், புக் செய்ய முடியும். இந்த ப்ராசஸை தொடங்க, தலைமை ரிசர்வேஷன் மேற்பார்வையாளரிடம் ஒரு கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதில் பயணத்தின் தேதி, ரயில் எண், தேவையான பெர்த்களின் எண்ணிக்கை மற்றும் பயணிகளின் விபரம் குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உங்களின் இந்த கோரிக்கையை தலைமை கட்டுப்பாட்டு அலுவலகம் அங்கீகரிக்க வேண்டும். உங்கள் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டதும், மொத்த டிக்கெட் முன்பதிவு கவுண்டரில் உங்கள் கோச்சுக்கான முன்பதிவைச் செய்யலாம். இதன் பிறகு உங்களுக்கு ஒரு ரெஃபரென்ஸ் நம்பர் வரும், பின்னர் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டதற்கான கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த முழு கோச்சுக்கான முன்பதிவு அதிகபட்சமான 6 மாதத்திற்கு முன்பும், குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு முன்பும் செய்ய முடியும்.

சுற்றுப்பயணத்தின் போது ஏழு நாட்கள் வரை ஒரு கோச்சை முன்பதிவு செய்தால் அதற்கான தொகை ஒரு கோச்சுக்கு ரூ 50,000 என ஐ.ஆர்.சி.டி.சி-யின் வலைதளம் தெரிவிக்கிறது. அதன்பிறகு ஒரு நாளைக்கு ரூ 10000 செலுத்த வேண்டும். ரயில்வே அமைச்சகத்தின் ஏதாவது திருத்தத்தின் போது இந்த அளவு மாறக்கூடும்.

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment