Advertisment

நகையா வாங்குறதவிட டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்றது தான் புத்திசாலித்தனம்

3% ஜிஎஸ்டியின் ஒரு முறை வரியைத் தவிர டிஜிட்டல் தங்கத்தினை வாங்கும் போது வேறெந்த கூடுதல் செலவுகளும் இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold bond, digital gold

மிகச்சிறந்த சேமிப்பு திட்டங்களை நாம் நம்முடைய எதிர்காலத்திற்காக உருவாக்கும் போது 10% வரை நம்ம்டைய வருமானத்தை தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். ஆனால் அதனை பத்திரமாக பாதுகாத்து வைப்பது, செய்கூலி மற்றும் சேதாரம் போன்ற விசயங்களை கருத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம்.

Advertisment

அதே சமயத்தில் டிஜிட்டல் முறையில் வாங்கி வைக்கப்படும் தங்கம் பாதுகாப்பானது. எளிதானது மேலும் தங்கத்தை சொத்தாக சேமிக்கும் போது மிகவும் உத்தரவாதம் தரும் சேமிப்பாக இது இருக்கும்.

டிஜிட்டல் தங்கம் என்பது தங்கத்தை கையில் நகையாக வாங்குவதற்கு பதிலாக நீங்கள் வாங்கிய தங்கத்தின் மதிப்பை சான்றிதழ் அல்லது டிஜிட்டல் அறிக்கையாக வைத்திருப்பது என்று அர்த்தம்.

Digital Gold, Sovereign Gold Bond, Gold ETF என தற்போது மூன்று சிறப்பான தங்க முதலீட்டு திட்டம் நடைமுறையில் உள்ளது. நீங்கள் டிஜிட்டல் முறையில் இந்த தங்க திட்டங்களில் முதலீடு செய்து தங்கத்தினை வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் அதில் முதலீடு செய்வதற்கு முன்பு இந்த மூன்று திட்டத்திற்கும் இருக்கும் வேறுபாடு என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Gold ETF மற்றும் SGB ஆகியவை பரிமாற்ற வர்த்தகமாகும். எனவே காலை 9 முதல் மாலை 03:30 மணி வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். ஆனால் டிஜிட்டல் தங்கம் என்ற திட்டம் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள இயலும்.

எஸ்.ஜி.பியின் லாக்-இன் காலம் 5 ஆண்டுகளாகும். முதிர்வுக்கு முன் விற்றால், அதிக பரிவர்த்தனைச் செலவைச் செலுத்த வேண்டும். டிஜிட்டல் கோல்டுக்கு, அத்தகைய லாக்-இன் எதுவும் இல்லை, அது அடுத்த நாளே விற்கப்படலாம்.

டிஜிட்டல் தங்கம் மூலம், தங்கத்தின் உண்மையான மதிப்பை நீங்கள் வாங்குகிறீர்கள், இது Physical வடிவத்தில் ஒரு பெட்டகத்தில் சேமிக்கப்படுகிறது. டிஜிட்டல் தங்கமானது, SGBகளைப் போலன்றி, முதலீடு செய்யப்பட்ட முழு மதிப்பின் காப்பீட்டுடன் வருகிறது.

3% ஜிஎஸ்டியின் ஒரு முறை வரியைத் தவிர டிஜிட்டல் தங்கத்தினை வாங்கும் போது வேறெந்த கூடுதல் செலவுகளும் இல்லை. ஆனால் Gold ETFs-ல் ஆண்டுக்கு 0.5-1% வரை தொடர்ச்சியான வருடாந்திர கட்டணங்களை செலுத்த வேண்டும். மேலும் தங்கம் வாங்க நீங்கள் டீமட் கணக்கை துவங்க வேண்டிய அவசியம் இல்லை.

Sovereign Gold Bonds எனப்படும் தங்கப் பத்திரம் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. இதன் விலை உயர்வு, குறைவு இரண்டுமே சந்தை மதிப்பை பொறுத்தே அமையும். இந்த திட்டத்தின் மெச்சூரிட்டி 8 ஆண்டுகள். ஆனாலும் ஐந்து ஆண்டுகள் கழித்தே நீங்கள் அதில் இருந்து வெளியேற முடியும். மேலும் இவை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யப்படுகிறது. SGB ​​இல் குறைந்தபட்ச முதலீடு ஒரு கிராம் மற்றும் அதிகபட்சம் ஒரு நிதியாண்டில் 4 கிலோ தங்கமாகும்.

NSE இல் கிடைக்கும் சில தங்க இ.டி.எஃப்.கள் நிப்பான் இந்தியா இ.டி.எஃப் கோல்ட் பி.இ.ஈ.எஸ், ஆக்ஸிஸ் கோல்ட் இ.டி.எஃப்., எச்.டி.எஃப்.சி கோல்ட் எக்ஸ்சேஞ்ச் ட்ரேடட் ஃபண்ட், ICICI ப்ருடென்ஷியல் கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட், Kotak Gold Exchange-Traded Fund, Quantum Gold Fund ஆகியவை ஆகும்.

SGB ​​மற்றும் Gold ETF போலல்லாமல் இ-வாலட்டுகள் அல்லது செயலிகள் மூலம் நீங்கள் டிஜிட்டல் தங்கத்தினை வாங்க முடியும். மலிவு விலைக்கு வரும்போது, ​​நீங்கள் டிஜிட்டல் தங்கத்தில் 1 ரூபாய் என்ற மிக குறைவான பணத்தை வைத்து முதலீடு செய்யத் தொடங்கலாம். முதலீட்டாளர்கள் நீண்ட கால இலக்குகளுக்காக வழக்கமான அடிப்படையில் சிறிய அளவில் தங்கத்தைக் குவிப்பதில் SIP அணுகுமுறையைப் பின்பற்றுகின்றனர்

எல்லாம் சரி, டிஜிட்டல் தங்கத்தை எப்படி எங்கே வாங்குவது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்தியாவில் மூன்று உரிமம் பெற்ற டிஜிட்டல் தங்க நிறுவனங்கள் உள்ளன. Augmont-Gold For All, MMTC-PAMP, SafeGold. நீங்கள் இதில் முதலீடு செய்ய ஆரம்பித்த உடன், இந்த நிறுவனங்கள் உங்களின் முதலீட்டுக்கு ஏற்ற வகையில் தங்கத்தை வாங்கி உங்கள் பெயரில் பாதுகாப்பான பெட்டகங்களில் சேமித்து வைக்கும். இருப்பினும், பல E-wallets, தரகர்கள் மற்றும் fintech நிறுவனங்களின் தளங்கள் உள்ளன, அவை இந்த மூன்று உரிமம் பெற்ற டிஜி கோல்ட் பிளேயர்களுடன் தங்கள் வாடிக்கையாளர்களின் வசதிக்காக டை-அப்களைக் கொண்டுள்ளன. நீங்கள் ஜி.பே, பேடிஎம், போன்பே, அமேசான் பே போன்ற ஆப்கள் மூலமாகவும் முதலீடு செய்ய முடியும். தரகு, சேமிப்பு மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியதால், வெவ்வேறு தளங்களில் தங்கத்தின் விலையில் சிறிய வித்தியாசம் இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment