Advertisment

ITR Filing Document: வருமானவரி தாக்கல் செய்ய சில ஆலோசனைகள்

Income Tax Return Filing Document Checklist: வருமானவரி தாக்கல் செய்வது என்றால் நிறைய ஆவணங்களை தயார் செய்ய வேண்டும் என்ற தலைவலி வரி செலுத்துவோருக்கு இருக்கத்தான் செய்யும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ITR Filing Documents Required, ITR Document Checklist

Vivad se Vishwas I-T is given a target

Important Documents for Income Tax Return E-Filing 2019: 2018 – 2019 நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி நாள். அதனால், வருமானவரி செலுத்துவோர் தாமதமாக வரி செலுத்தி அபராதம் செலுத்துதல் போன்றவற்றை தவிர்க்க ஜூலை 31 ஆம் தேதிக்குள் வருமானவரி தாக்கல் செய்ய வருமானவரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

பொதுவாக வருமானவரி தாக்கல் செய்வது என்றால் நிறைய ஆவணங்களை தயார் செய்ய வேண்டும் என்ற தலைவலி வரி செலுத்துவோருக்கு இருக்கத்தான் செய்யும். என்னென்ன ஆவணங்கள் இணைக்க வேண்டும் என்ற குழப்பத்தால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரி செலுத்தாமல், பிறகு அபராதத்துடன் வரி செலுத்தவும் நேரிடும். அப்படியானவர்களுக்கு உதவுவதற்காகவும் உங்களுடைய வருமானவரி தாக்கலை எளிமையாக்க இதோ சில ஆலோசனைகள்.

வருமானவரி தாக்கல் செய்வதற்கு கீழே குறிப்பிடப்படும் இந்த ஆவணங்களை எல்லாம் நீங்கள் அவசியம் சேகரிக்க வேண்டும்.

படிவம் 16

முதலில் படிவம் 16-ஐ வாங்க வேண்டும். இந்த ஆண்டு வருமானவரி தாக்கல் செய்ய படிவம் 16 புதிய முறையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

படிவம் 16 பகுதி - ஏ, பகுதி - பி என இரண்டு பகுதிகளை உள்ளடக்கியது. பகுதி – ஏ-வில் இந்த ஆண்டில் உங்களுடைய நிறுவனத்தால் கழிக்கப்படும் வரி விவரங்களை உள்ளடக்கியது. அதனுடன், உங்களுடைய பான் நம்பர் இருக்கும். பான் நம்பருடன் உங்களுடைய நிறுவனத்தின் டின் நம்பரும் இருக்கும்.

படிவம் பகுதி – பி உங்கள் மொத்த சம்பளத்தில் விலக்கு அளித்தல், மற்றும் பிற படிகள் போன்ற விவரங்களை உள்ளடக்கியது.

இருப்பினும், தற்போதைய வரிச் சட்டங்களின்படி குறிப்பிட்ட வரம்புகளுக்கு மேல் நிலையான வைப்புத்தொகை, தொடர்ச்சியான வைப்புத்தொகை போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட வட்டி போன்ற சம்பளங்களைத் தவிர வேறு கட்டணங்களில் டி.டி.எஸ் கழிக்கப்பட்டிருந்தால், உங்கள் வங்கி (நிலையான வைப்புத்தொகை இருந்தால்) உங்களுக்கு படிவம் 16 ஏ-வில் அத்தகைய விலக்கு விவரங்களை வழங்கும்.

ஒருவேளை சொத்து விற்பனை செய்தால், வாங்குபவர் உங்களுக்கு செலுத்திய தொகையில் கழிக்கப்படும் டி.டி.எஸ் காட்டும் படிவம் 16 பி-ஐ உங்களுக்கு வழங்குவார்.

2. படிவம் 26ஏஎஸ்

படிவம் 26 ஏஎஸ் வரி செலுத்துவோர் (வங்கிகள் அல்லது முதலாளிகள்) வரி செலுத்துவோர் சார்பாக அரசாங்கத்தில் கழிக்கப்பட்ட / டெபாசிட் செய்யப்பட்ட வரி குறித்த விவரங்களைக் கொண்டுள்ளது. இது உங்கள் பாஸ் புத்தகத்தைப் போன்றது, இது உங்கள் பான் மீது டெபாசிட் செய்யப்பட்ட அனைத்து வரிகளின் தகவல்களையும் கொண்டுள்ளது.

படிவம் 26ஏஎஸ்-ஐ ட்ரேசஸ் (டிடிஎஸ் நல்லிணக்க பகுப்பாய்வு மற்றும் திருத்தம் செயல்படுத்தும் அமைப்பு) வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். 2018 – 19 ஆம் நிதியாண்டில் கழிக்கப்படும் அனைத்து வரிகளும் உங்கள் பானுக்கு எதிரான படிவத்தில் பிரதிபலிக்கின்றன என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

3. ஆதார் அட்டை

வருமானவரி தாக்கல் செய்யும் போது, ஏப்ரல் 1, 2019 முதல் உங்கள் ஆதார் எண்ணை மேற்கோள் காட்ட வேண்டும் என வருமானவரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. இருப்பினும், நீங்கள் ஆதார் விண்ணப்பித்திருந்தாலும் அதைப் பெறவில்லை என்றால், உங்கள் வரிவிதிப்பில் பதிவு ஐடியை வழங்கலாம்.

4.சம்பள விவர சீட்டுகள்

வருமானவரி தாக்கலில் 2 தனிநபர்கள் தங்களுடைய தனிப்பட்ட சம்பள வருமானத்தின் தன்மையைக் குறிப்பிட வேண்டும். அதனால், அடிப்படை சம்பளம், வீட்டு வாடகை அளித்தல் போன்ற விவரங்கள் அடங்கிய சம்பள சீட்டுகளை வைத்திருப்பது நல்லது.

5. வங்கிகள், தபால் அலுவலகம் வழங்கும் வட்டி சான்றிதழ்கள்

இந்த ஆண்டு வருமானவரி தாக்கல் படிவங்களில் நீங்கள் சேமிப்புக் கணக்கில் சம்பாதித்த வட்டி, நிலையான வைப்புத்தொகை அல்லது வேறு ஏதேனும் வருமானம் போன்றவற்றில் ஈட்டிய வட்டி ஆகியவற்றின் வருமானத்தின் மூலத்தை வெளியிட வேண்டும். நீங்கள் ஈட்டிய மொத்த வட்டியை அறிய வங்கிகள், தபால் அலுவலக கிளை அல்லது வேறு எந்த நிதி நிறுவனத்திடமிருந்து வட்டி சான்றிதழ்களைப் பெறுங்கள்.

வட்டி சான்றிதழ்கள் கிடைக்கவில்லை என்றால், மாற்றாக மார்ச் 31, 2019 வரை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்ட வட்டி விவரங்களை உள்ளடக்கிய உங்கள் புதுப்பிக்கப்பட்ட பாஸ்புக் விவரங்களை பயன்படுத்தலாம்.

6. வரி சேமிப்பு முதலீடுகளின் சான்றுகள்

2018-19 நிதியாண்டில் பிரிவு 80 சி, 80 சிசிசி மற்றும் 80 சிசிடி (1) ஆகியவற்றின் கீழ் செய்யப்பட்ட வரி சேமிப்பு முதலீடுகள் உங்கள் வரிப் பொறுப்பைக் குறைக்க உதவும். இந்த மூன்று பிரிவுகளின் கீழ் ஒருவர் கோரக்கூடிய அதிகபட்ச வரிவிலக்கு ஒரு நிதியாண்டில் ரூ .1.5 லட்சத்தை தாண்டக்கூடாது.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்), பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), தேசிய ஓய்வூதிய திட்டம் (என்.பி.எஸ்) ஆகியவை 80 சி பிரிவின் கீழ் பொதுவாகப் பெறப்படும் வரிவிலக்குகள் ஆகும்.

7. மூலதன ஆதாயங்கள்

உங்கள் வருமானவரி தாக்கலில் சொத்து, மியூச்சுவல் ஃபண்ட்ஸ், ஈக்விட்டி பங்குகள் விற்பனையால் கிடைக்கும் அனைத்து லாபங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். 2018-19 நிதியாண்டில் ஈக்விட்டி பங்குகள் மற்றும் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் விற்பனையிலிருந்து எழும் நீண்ட கால மூலதனம் மற்றும் ஒரு வருடத்திற்கும் மேலாக வைத்திருக்கும் நீண்ட கால மூலதன ஆதாயம் (எல்.டி.சி.ஜி) ரூ.1,00,000 தாண்டினால் வரி விதிக்கப்படும். இது மொத்தம் ரூ.1,00,000 லட்சத்தை தாண்டினால், 2018-19 நிதியாண்டு முதல், ஈக்விட்டி மீதான எல்.டி.சி.ஜி குறியீட்டு பலன் இல்லாமல் 10 சதவீதமாக வசூலிக்கப்படும்.

8. உங்கள் வங்கிக் கணக்கின் விவரங்கள்

வருமானவரி தாக்கல் செய்யும்போது, உங்களுடைய அனைத்து வங்கி கணக்குகளின் விவரங்கள், வங்கியின் பெயர்கள், வங்கி கணக்கு எண், எந்த வகையான வங்கி கணக்கு, வங்கியின் ஐஎஃப்எஸ்சி குறியீடு ஆகியவற்றை கொடுக்க வேண்டும். ஏதேனும், பணத்தைத் திரும்பப் பெறுவது இருந்தால் சரியான ஐ.எஃப்.எஸ்.சி குறியீட்டை அளிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

9. வங்கி / என்.பி.எஃப்.சியில் இருந்து வீட்டுக் கடன் அறிக்கை

உங்கள் வருமானவரி தாக்கல் செய்யவதற்கு ஒரு தகவல் ஆதாரமாக வீட்டுக் கடன் அறிக்கை சான்றுகள் அவசியமானது. இது நீங்கள் எவ்வளவு அசல் மற்றும் வட்டியைச் திருப்பச் செலுத்தியுள்ளீர்கள் என்ற விவரங்களை இது வழங்குகிறது. வீட்டுக் கடனில் செலுத்தப்பட்ட வட்டி அளவு மற்றும் அந்த வீட்டுச் சொத்தில் இருந்து ஈட்டிய வாடகை வருமானம் போன்ற விவரங்கள் ஏதேனும் இருந்தால் வழங்கப்பட வேண்டும். அத்தகைய வட்டி செலுத்தப்பட்டால் பிரிவு 24 இன் கீழ் உங்கள் வரிப் பொறுப்பைக் குறைக்கலாம். ஏனெனில். இதில் நீங்கள் ரூ.2,00,000 வரை விலக்கு கோரலாம்.

10. பிரிவு 80 டி முதல் 80 யூ வரை விலக்குகளை கோருவதற்கான ஆவண சான்றுகள்

வருமானவரி சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் நீங்கள் விலக்குகளை கோரக்கூடிய சில செலவுகள் உள்ளன. நீங்கள் உங்களுக்கும், உங்களுடைய மனைவி, குழந்தைகளுக்கு 2018-19 நிதியாண்டில் செலுத்தப்பட்ட சுகாதார காப்பீட்டு பிரீமியத்துக்கு பிரிவு 80 டி இன் கீழ் விலக்கு கோர தகுதியுடையவர்கள். இதன்மூலம், ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.25,000 வரை விலக்கு கோரலாம். இருப்பினும், உங்கள் பெற்றோரின் சுகாதார காப்பீட்டு பிரீமியத்திற்கு நீங்கள் பணம் செலுத்தியிருந்தால், பெற்றோரின் வயதைப் பொறுத்து ரூ.25,000 அல்லது ரூ.50,000 கூடுதல் விலக்கு கோரலாம்.

Income Tax Return Filing
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment