கேஷ்பேக் ஆஃபர்களை அள்ளித்தரும் டெலிகாம் நிறுவனங்கள்!

தற்போது சந்தையில் அறிவிக்கப்பட்டுள்ள டெலிகாம் நிறுவனங்களின் கேஷ்பேக் ஆஃபர்கள் .

முன்னணி டெலிகாம் நிறுவனங்களான  ஏர்டெல், ஜியோ, ஐடியா போன்றவை வாடிக்கையாளர்களை கவரும் வகையில், அதிரடி கேஸ்பேக் ஆஃபரை அறிவித்துள்ளது.

டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களுக்கு  இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.  இந்த போட்டியில் வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் ஆஃபர், குறைந்த விலையில் அதிகா டேட்டா, கிஃபுட் வவுச்சர், ரீசார்ஜ் கூப்பன்கள்  ஆகியவை தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

டெலிகாம் சந்தியில், ஜியோவின் வருகைக்கு பின்பு, பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.  ஜியோ நிறுவனம் அறிவித்த கேஷ்பேக் ஆஃபர் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும்  வரவேற்ப்பை பெற்றிருந்த நிலையில், மற்ற நிறுவனங்களும்  ஜியோவைப் போலவே, கேஷ்பேக் சலுகைகளை  அறிமுகப்படுத்து வருகின்றன.  அந்த வகையில், தற்போது சந்தையில் அறிவிக்கப்பட்டுள்ள டெலிகாம் நிறுவனங்களின்  கேஷ்பேக் ஆஃபர்கள் .

ஜியோ ரூ  2,200 கேஷ்பேக்: 

ஜியோ நிறுவனம்,  ’ஃபுட் பால் ஆஃபர்’ என்ற பெயரில்,  ரூ. 2,200 க்கு  கேஷ்பேக் ஆஃபரை  அறிவித்துள்ளது. மார்ச் 31 ஆம் தேதி, வரை மட்டுமே செயல்பாட்டில்  இருக்கும் இந்த ஆஃபரில் வாடிக்கையாளர்களுக்கு,  ரீசார்ஜ் கூப்பன்கள்,   கிஃபுட் வவுச்சர்கள், மொபைல் வாலெட் மற்றும் முன்னணி நிறுவனங்களை  சேர்ந்த ஸ்மார்ஃபோன்களுக்கு  கேஷ்பேக்  ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏர்டெல் ரூ.200 கேஷ்பேக்: 

ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள இந்த கேஷ்பேக் ஆஃபரில், நோக்கியா 3 ஜி, 4 ஜி ஸ்மார்ஃபோன்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், ரூ 169 ரீசார்ஜ் திட்டத்திலும் இந்த கேஷ்பேக் ஆஃபரை வாடிக்கையாளர்கள் இந்த ஆஃபரிஅ பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஐடியா ரூ.2000 கேஷ்பேக்: 

முன்னணி நிறுவனங்களுடன் தற்போது களத்தில் குதித்துள்ள ஐடியா நிறுவனம், ரூ 2000 மதிப்புள்ள கேஷ்பேக் ஆஃபரை அறிவித்துள்ளது.  இதன்படி, ஐடியா    ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.199 அல்லது ரூ.398, ரூ 449, ரூ.459 மற்றும் ரூ.509 ஆகிய ரீசார்ஜ் திட்டங்களில் ரீசார்ஜ்  செய்ய வேண்டும். முதல் 18 மாதங்களில் ரூ.750 மற்றும் அடுத்த 18 மாதங்களில் ரூ.1250 கேஷ்பேக் கிடைக்கும் என ஐடியா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

×Close
×Close