Advertisment

IRCTC News: ரயில் டிக்கெட் கேன்சல் செய்யணுமா? சார்ஜ் எவ்ளோன்னு தெரிஞ்சுக்கோங்க!

நீங்கள் புக்கிங் செய்த வகுப்பு மற்றும் கேன்சல் செய்யும் நேரம் பொறுத்து டிக்கெட் பணம் கழிக்கப்பட்டு முன்பதிவு தொகை வழங்கப்படுகிறது. அதுபற்றிய கட்டணப் பட்டியலை இச்செய்தி தொகுப்பில் காணலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IRCTC News: ரயில் டிக்கெட் கேன்சல் செய்யணுமா? சார்ஜ் எவ்ளோன்னு தெரிஞ்சுக்கோங்க!

பேருந்து, விமானப் பயணங்களை விட ரயில் பயணங்களைப் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கின்றனர். இதில் பயணக் கட்டணம் மிகவும் குறைவு என்பதோடு, உணவு, கழிப்பறை போன்ற வசதிகள் பொதுமக்களுக்கு ஏதுவாக உள்ளன.

Advertisment

அதே சமயம், ரயில் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டால் அதற்கான முன்பதிவுக் கட்டணம் திரும்ப வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. முன்பதிவு செய்த முழுத் தொகையும் ரிட்டன் வழங்கப்படாது

என்ன நிபந்தனைகள்

ரயில் டிக்கெட்டை நீங்கள் ரத்து செய்தால், நீங்கள் புக்கிங் செய்த வகுப்பு மற்றும் கேன்சல் செய்யும் நேரம் பொறுத்து டிக்கெட் பணம் கழிக்கப்பட்டு முன்பதிவு தொகை வழங்கப்படுகிறது.

எவ்வளவு ரீஃபண்ட் கிடைக்கும் என்ற விவரம் நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. அதுபற்றிய கட்டணப் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

கட்டண பட்டியல்

ஐஆர்சிடிசி கூற்றுப்படி, ரயில் புறப்படும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் டிக்கெட் கேன்சல் செய்தால்,

  • ஏசி முதல் வகுப்பு - ரூ.240
  • ஏசி 2ஆம் வகுப்பு - ரூ.200
  • ஏசி 3ஆம் வகுப்பு - ரூ.180
  • ஸ்லீப்பர் கிளாஸ் - ரூ.120
  • செகேண்ட் கிளாஸ் - ரூ.60

ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரம் முதல் 48 மணி நேர இடைவெளியில் கேன்சல் செய்தால் டிக்கெட் தொகையில் 25 சதவீதப் பணம் பிடித்தம் செய்யப்படும்.

12 முதல் 4 மணி நேரத்துக்கு முன்பு கேன்சல் செய்தால் 50 சதவீதப் பணம் பிடிக்கப்படும். அதோடு ஜிஎஸ்டி சேர்த்து கழிக்கப்படும்.

குறிப்பு: பயணிகளுக்கான சார்ட் தயாரிக்கப்பட்ட பின்னர் கேன்சல் செய்தால் பணம் எதுவும் கிடைக்காது. ஒருவேளை TDR பூர்த்தி செய்திருந்தால் ரீஃபண்ட் கிடைக்கும். கேன்சல் செய்யப்படாத டிக்கெட் எதற்கும் ரீஃபண்ட் கிடைக்காது.

ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்யும் செயல்முறையை ரயில்வே மிகவும் எளிதாக்கியுள்ளது.நீங்கள் வீட்டில் உட்கார்ந்தபடியே ஆன்லைனில் டிக்கெட்டுகளை எளிதாக பதிவு செய்யலாம் அல்லது ரத்து செய்யலாம்.

நீண்ட நேர வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இல்லை. ஆனால் டிக்கெட்டுகளை ரத்து செய்கையில் கழிக்கப்படும் தொகையில் பலருக்கு இன்னமும் குழப்பம் உள்ளது.

ஆன்லைனில் டிக்கெட் ரத்து செய்யும் முறை

  • நீங்கள் ரயில் டிக்கெட் புக்கிங் செய்திருந்தால், முதலில் ஐஆர்சிடிசியின் https://www.irctc.co.in/nget/train-search என்ற இணையப்பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
  • அதில், லாகினுக்கு தேவையான Username அண்ட் password பதிவிட வேண்டும்.
  • அதில், My Transactions கிளிக் செய்து, Tickey history பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் டிக்கெட்டை ரத்து செய்ய, Cancellation ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • டிக்கெட் ரத்தை உறுதிப்படுத்த, மீண்டும் Cancel confirm ticket ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும்.
  • டிக்கெட் கட்டண தொகை கழிக்கப்படும், மீதமுள்ள தொகை உங்களின் வங்கி கணக்கிற்கு ஓரிரு நாளில் வந்துவிடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment