Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9 சதவீதம் வட்டி வழங்கும் 5 வங்கிகள்: நோட் பண்ணுங்க ப்ளீஷ்!

ஃபிக்ஸட் டெபாசி்ட சேமிப்புக்கு 9 சதவீதம் வட்டி வழங்கும் 5 வங்கிகளை பார்ப்போம்.

author-image
Jayakrishnan R
New Update
Latest DBS Bank FD interest rate

DBS வங்கி 8 சதவீதம் வட்டி வழங்குகிறது.

பெரும்பாலும் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்புவார்கள். ஏனெனில் ஃபிக்ஸட் டெபாசிட் நெகிழ்வான ஒரு சேமிப்பு திட்டமாக உள்ளது.

தற்போது நாம், 9 சதவீதத்துக்கும் மேல் வட்டி வழங்கும் 5 வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

Advertisment

1) யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, மூத்த குடிமக்கள் நிலையான வைப்புகளுக்கு 9 சதவீதத்திற்கும் அதிகமான வட்டி விகிதங்களை வழங்குகிறது.

அதாவது, 181 முதல் 201 நாள்களுக்குள் முதிர்ச்சியடையும் பிக்ஸட் டெபாசிட்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு வங்கி 9.25 சதவீத வட்டியை வழங்குகிறது. 1001 நாள்களில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 9.5 சதவீத வட்டியை மூத்த குடிமக்கள் பெறலாம்.

2) ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ்

மூத்த குடிமக்கள் 1000 நாள்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 9.11 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம்.

3) ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

மூத்த குடிமக்கள் ஜன சிறு நிதி வங்கிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட காலங்களின் நிலையான வைப்புகளுக்கு 9 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம்.

4) சூர்யாடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

சூர்யாடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு ஐந்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 9.6 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

இந்த வங்கியில் 999 நாள்களில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 9 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.

5) ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் மூத்த குடிமக்கள் FDகளுக்கு 9 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment