Advertisment

கோயம்பேடு சந்தைக்கு நாளை விடுமுறை: அதிர்ச்சி தந்த காய்கறிகள் விலை!

கத்தரிக்காய் 25 லிருந்து ரூ. 60 ஆகவும், பீன்ஸ் 20லிருந்து ரூ.50 ஆகவும் உயர்ந்துள்ளது

author-image
WebDesk
New Update
koyambedu tamil koyambedu market

koyambedu tamil koyambedu market

koyambedu market koyambedu vegetable : நிவர் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மழை பெய்த நிலையில் காய்கறி வரத்து குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி புயல் காரணமாக மக்கள் அனைவரும் ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை ஏற்கனவே சேமித்து வைத்து விட்டனர். இதனால் காய்கறிகளின் இருப்பு குறைந்துள்ளதால் விலை ஏற்றம்

Advertisment

ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய், விலை 90 ஆக அதிகரித்துள்ளது. குடை மிளகாய் 30லிருந்து 50 ரூபாயாகவும், கத்தரிக்காய் 25 லிருந்து ரூ. 60 ஆகவும், பீன்ஸ் 20லிருந்து ரூ.50 ஆகவும் உயர்ந்துள்ளது. தொடர் மழை மற்றும் நாளை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வார விடுமுறை என்பதால் காய்கறிகளின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அது நிரந்தரம் இல்லை எனவும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த விலை ஏற்றம் சாதாரண நிலைக்கு வந்துவிடும்.

காய்கறிகளின் விலைப் பட்டியல்:

தக்காளி – ரூ.30

வெங்காயம் – ரூ.60

அவரைக்காய் – ரூ.45

பீன்ஸ் – ரூ.45

பீட்ரூட் – ரூ.20

வெண்டைக்காய் – ரூ.30

மாங்காய் – ரூ.80

நூக்கல் – ரூ.15

உருளைக் கிழங்கு – ரூ.40

முள்ளங்கி – ரூ.15

புடலங்காய் – ரூ.25

சுரைக்காய் – ரூ.20

பாகற்காய் – ரூ.15

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment