ஹெச்.டி.எஃப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., எஸ்.பி.ஐ., ஆக்ஸிஸ், ஐ.டி.எஃப்.சி ஃபர்ட்ஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் ரூ.2கோடிக்குள்ளான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம் குறித்து பார்க்கலாம்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு 3.5 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. மூத்தக் குடிமக்களுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் வழங்கப்படும். இது மே29 முதல் அமலுக்கு வந்துள்ளது.
எஸ்.பி.ஐ வங்கி
எஸ்.பி.ஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு 3. சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. மூத்தக் குடிமக்களுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் வழங்கப்படும். இது பிப்.15 முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு 3 சதவீதம் முதல் 7.1 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. மூத்தக் குடிமக்களுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் வழங்கப்படும்.
ஆக்ஸிஸ் வங்கி
ஆக்ஸிஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு 3.5 சதவீதம் முதல் 7.1 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. மூத்தக் குடிமக்களுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் வழங்கப்படும்.
ஐ.டி.எஃப்.சி. ஃபர்ட்ஸ் வங்கி
ஐ.டி.எஃப்.சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு 3.50 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. மூத்தக் குடிமக்களுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் வழங்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“