Advertisment

உங்கள் வரிச்சுமையை குறைக்கும் எல்.ஐ.சியின் ஐந்து திட்டங்கள்!

ஜீவன் ஆதாரின் மற்றும் ஜீவன் விஸ்வாஸ் திட்டங்களின் கீழ் ஊனமுற்றவர்களுக்கான காப்பீட்டு தொகைக்கு வருமானவரி விலக்கு  அளிக்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
LIC Schemes, LIC Policies

LIC Policies to be closed

LIC 5 tax benefits insurance premiums : இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவரும் வருமான வரியை செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். தற்போது 60 வயதிற்கும் குறைவானவர்கள் தாங்கள் சம்பாதிக்கும் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும். 3 லட்சம் என்பது 60 முதல் 80 வயதுக்குட்பட்டவர்களுக்கு உச்சவரம்பாகவும், 5 லட்சம் என்பது 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உச்ச வரம்பாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுட்காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சியில் இந்த திட்டங்களில் நீங்கள் பணம் செலுத்தினால் வருமான  வரியை குறைவாக நீங்கள் செலுத்த இ

Advertisment

எல்.ஐ.சியில் கட்டப்படும் இன்சூரன்ஸ் ப்ரீமியத்திற்கு வரி விலக்கு உண்டு

முறையாக செலுத்தப்பட்ட இன்ஸ்யூரன்ஸ் பிரிமியம் மூலமாக வருமானவரியில் இருந்து விலக்கு பெற இயலும். குழந்தை மட்டும் கணவன்/மனைவி பெயரில் செலுத்தப்படும் இன்ஸ்யூரன்ஸ் ப்ரீமியத்திற்கும் வருமான வரித் தளர்வு உண்டு.

ஜீவன் நீதி திட்டம், ஜீவன் சுரக்‌ஷா திட்டம்

ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான இந்த வருடாந்திர திட்டங்களில் ஒரு நபர் தனது வரிவிதிப்பு தன் வருமானத்திலிருந்து செலுத்தப்பட்ட அல்லது டெபாசிட் செய்த எந்தவொரு தொகைக்கும் வருமான வரிச்சட்டம் பிரிவு 80சிசிசியின் கீழ் வரி விலக்கு பெற்றுக் கொள்ள இயலும்.

Medical Insurances

தனக்கு அல்லது தன்னுடைய குடும்ப உறுப்பினரின் மருத்துவ காப்பீட்டிற்கு இந்த ஆண்டில் ரூ.25 ஆயிரம் வரை பணம் செலுத்தியிருந்தால் அந்த பணத்திற்கு வருமான வரித் தளர்வு அளிக்கப்படுகிறது. இது மட்டுமின்றி மத்திய அரசின் ஏதேனும் ஒரு சுகாதார திட்டத்தின் கீழ் பணம் செலுத்தியிருந்தாலும் இந்த விலக்கு அளிக்கப்படும். கூட்டு குடும்பத்திற்கும் இந்த விதி பொருந்தும். உங்களின் 60 வயதுக்கு மேற்பட்ட பெற்றோர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு நீங்கள் மருத்துவ காப்பீடு செலுத்தினால் வருமான வரியில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை தளர்வு அளிக்கப்படும். முழு உடல் பரிசோதனை மேற்கொண்டால் அதற்கு ரூ.5000 வரை வருமான வரித் தளர்வு அளிக்கப்படுகிறது.

ஜீவன் சுரக்ஷா,  ஜீவன் நிதி திட்டங்களின் கீழ் ஓய்வூதியம்

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 (10 ஏ) (iii) இன் கீழ்,  ஜீவன் சுரக்ஷா,  ஜீவன் நிதி வருடாந்திர திட்டங்களில் கீழ் பெறப்படும் ஓய்வூதியத்திற்கு  வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

 ஜீவன் ஆதார் திட்டம் (செக் .80 டி.டி)

ஜீவன் ஆதாரின் மற்றும் ஜீவன் விஸ்வாஸ் திட்டங்களின் கீழ் ஊனமுற்றவர்களுக்கான காப்பீட்டு தொகைக்கு வருமானவரி விலக்கு  அளிக்கப்படுகிறது. இத்திட்டங்கள் முறையே ரூ .75000 மற்றும் ரூ .1,25,000  என்ற ரீதியில் விலக்களிக்கிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment