Advertisment

ரூ.29 வீதம் முதலீடு: ஆதார் அட்டை வைத்திருக்கும் பெண்களே... உங்களுக்கு இந்த ஸ்கீம்!

அதிகபட்சமாக ஒருவர் 20 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
PPF Scheme; மாதம் ரூ.1000 முதலீட்டில் ரூ.18 லட்சம் வருமானம்; எப்படி தெரியுமா?

LIC Aadhar Shila Plan : உங்களின் நிதியை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து சிறப்பான பலன்களை பெற விரும்புகிறீர்களா பெண்களே? உங்களுக்கானது தான் இந்த சிறப்பு பாலிசி திட்டம். எல்.ஐ.சி. பெண்களுக்காகவே பிரத்யோகமாக இந்த பாலிசியை வழங்கியுள்ளது.

Advertisment

எல்.ஐ.சி. ஆதார் ஷீலா திட்டம் என்ற இந்த திட்டத்தில் 8 முதல் 55 வயதுள்ள பெண்களால் முதலீடு செய்ய இயலும். இது உங்களின் சேமிப்பிற்கு பாதுகாப்பையும் சிறந்த ரிட்டர்ன்ஸ்களையும் வழங்குகிறது. ஆனால், ஆதார் அட்டைகள் வைத்திருக்கும் பெண்களால் மட்டுமே இந்த பாலிசியை பெற முடியும். இந்த பாலிசி முதிர்வுரும் போது பாலிசி ஹோல்டர்கள் அதன் நன்மைகளை அறுவடை செய்வார்கள். இந்த பாலிசி பாலிசிதாரருக்கு மட்டுமின்றி, அவர் இறந்த பிறகு அவருடைய குடும்பத்தினருக்கும் சிறந்த பாதுகாப்பினை வழங்குகிறது.

குறைந்தபட்சமாக ரூ. 75 ஆயிரம் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் வரை ஒருவரால் இந்த எல்.சி. ஆதார் ஷீலா திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தின் குறைந்தபட்ச மெச்சூரிட்டி காலம் 10 ஆண்டுகள். அதிகபட்சமாக ஒருவர் 20 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். ஒருவர் ப்ரீமியத்தை மாதம் ஒருமுறை அல்லது காலாண்டுக்கு ஒரு முறை அல்லது அரையாண்டுக்கு ஒருமுறை செலுத்தலாம்.

உங்களின் வயது 30. நீங்கள் நாள் தோறும் ரூ. 29 என்று நீங்கள் அடுத்த 20 வருடங்களுக்கு முதலீடு செய்கிறீரக்ள் என்று வைத்துக் கொள்வோம். முதலாம் ஆண்டில் உங்களின் மொத்த முதலீடு ரூ. 10959 ஆஉம். 4.5% வரிக்கு பிறகு அடுத்த ஆண்டு முதல் ரூ. 10723 நீங்கள் செலுத்த வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளில் நீங்கள் இப்படியாக ரூ. 2,14,696-ஐ முதலீடு செய்தால் மெச்சூரிட்டியின் போது ரூ. 3,79,000-ஐ ரிட்டர்ன்ஸாக பெறுவீர்கள்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aadhaar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment