Advertisment

வருங்காலத்திற்காக நீங்கள் சேமிக்கும் பணத்தில் உங்களுக்கு கடன் கிடைக்கும் தெரியுமா?

இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், இந்த கடனை நீங்கள் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை.

author-image
WebDesk
New Update
lic loan lic online lic scheme lic insta loan

lic loan lic online lic scheme lic insta loan

lic loan lic online lic scheme lic insta loan : மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யிடம் (Life Insurance Corporation) காப்பீட்டு வாங்கியிருந்தால், நீங்கள் பிரீமியம் தொகைக்கு பதிலாக கடன் பெறலாம். உங்கள் தேவைகளுக்கு ஈடாக எல்.ஐ.சி யிலிருந்து தனிப்பட்ட கடன் பெறலாம்.

Advertisment

எல்.ஐ.சியின் (LIC Policy) புதிய கொள்கை காரணமாக, நீங்கள் கடன் வாங்க எங்கும் செல்ல வேண்டியதில்லை, மாறாக வீட்டில் இருந்தபடியே நிறுவனம் உங்களுக்கு கடன் வழங்கும். இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், இந்த கடனை நீங்கள் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை.

பாலிசி (LIC Policy Loan) முதிர்ச்சியடைந்த பிறகு, நிறுவனம் கடனுக்கான தொகையை கழித்துவிட்டு, மீதமுள்ள பணத்தை உங்களுக்கு திருப்பி அளிக்கும். அதாவது, நீங்கள் அதன் வட்டியை மட்டுமே திருப்பிச் செலுத்த வேண்டும், மேலும் பாலிசியில் உறுதிப்படுத்தப்பட்ட தொகையில் இருந்து, உங்கள் கடன் தொகையை நிறுவனம் கழித்துக்கொள்ளும்.

எல்.ஐ.சி (LIC) நிறுவனத்தில் கடன் வாங்க இந்திய குடிமகனாக இருப்பது அவசியம். இது தவிர, நீங்கள் எல்.ஐ.சி பாலிசியை வாங்கி இருக்க வேண்டும். கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்த வேண்டும். உங்கள் வயது 18 வயதுக்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். பாலிசியின் உறுதிப்படுத்தப்பட்ட மதிப்பில் அதிகபட்சம் 90 சதவீதம் வரை நீங்கள் கடன் பெறலாம். ஆனால் இந்த திட்டமானது நிபந்தனைகளுக்கு உட்பட்டது. கொரோனா காலத்தில் வெளியான இந்த அறிவிப்பு தற்போது வரை செயல்பாட்டில் உள்ளதா என்பதை முன்பே முகவரிடம் விசாரித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment