Advertisment

எல்ஐசி வாடிக்கையாளரா? - காப்பீடு தொகை செலுத்துவது குறித்த முக்கிய அறிவிப்பு இங்கே

LIC Updates: இந்திய ஆயூள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) காப்பீட்டு கட்டணத் தொகை கட்டுவதற்கான காலக்கெடுவை ஏப்ரல் 15 வரை நீட்டித்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
LIC policy Important premium payment

LIC policy Important premium payment

LIC: நீங்கள் எல்ஐசி பாலிசி சந்தாதாரரா, பாலிசி காப்பீட்டு கட்டணத் தொகை (premium) கட்டாமல் நிலுவையில் உள்ளதா, அப்படியானால் இது உங்களுக்கான ஒரு முக்கியமான செய்தி. கொரோனா வைரஸ் நெருக்கடியின் காரணமாக அரசால் நடத்தப்படும் முக்கிய காப்பீட்டுக் கழகமான இந்திய ஆயூள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) காப்பீட்டு கட்டணத் தொகை கட்டுவதற்கான காலக்கெடுவை ஏப்ரல் 15 வரை நீட்டித்துள்ளது. மேலும் எல்ஐசி தனது வாடிக்கையாளர்களை காப்பீட்டு கட்டணத் தொகை கட்டுவதற்காக அலுவலகத்துக்கு வருவதை தவிர்க்குமாறும் வீட்டிலேயே இருக்குமாறும் அல்லது தங்களது ஆன்லைன் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisment

கோவிட் -19 காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கணக்கில் கொண்டு எல்ஐசி தனது பாலிசி தாரர்களுக்கு காப்பீட்டு கட்டணத் தொகை நிலுவையை கட்டுவதற்கு தளர்வை அறிவித்து நிலுவையில் உள்ள பாலிசி காப்பீட்டு கட்டணத் தொகையை கட்டுவதற்கான கடைசி தேதியை 15 ஏப்ரல் 2020 வரை நீட்டித்துள்ளது.

நான்கு மணி நேரம் மட்டும் செயல்படும் வங்கிகள் - கடன் வழங்குவதும் நிறுத்தம்

நாட்டில் அதிகரித்து வரும் நோவல் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேசிய தலைநகர் உட்பட பல்வேறு மாநிலங்களில் முழு அடைப்பு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களிடம் தேவையில்லாத பயணங்களை தவிர்க்கவும், வீட்டின் உள்ளேயே இருக்கவும் அறிவுறுத்தி வருகின்றன.

சுமார் 3.7 லட்சம் மக்களை பாதித்து 13,049 இறப்புகளை உலகம் முழுவதும் ஏற்படுத்திய உயிர்கொல்லி வைரஸான கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு பிரதமரின் வேண்டுகோளை ஏற்று ஞாயிற்று கிழமை நாடுமுழுவதும் மக்கள் ஊரடங்கு மேற்கொள்ளப்பட்டது.

முன்னெப்பொதும் இல்லாத வகையில் ஞாயிறன்று நாடு முழுவதும் நடைபெற்ற மக்கள் ஊரடங்கின் போது பல மில்லியன் மக்கள் வீட்டின் உள்ளேயே இருந்தனர், தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன ஒன்றிரண்டு வாகனங்கள் மட்டும் சாலைகளில் ஓடின.

எஸ்பிஐ-யின் Quick - Missed call Banking : நெட் இல்லாமல் பேலன்ஸ் செக் பண்ணலாம்

சமூக விலகல் பயிற்சியின் ஒரு பாகமாக மக்கள் இந்த 14 மணி நேர ஊரடங்கின் போது வீட்டின் உள்ளேயே இருந்தனர். அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளைத் தவிர மற்ற எல்லா சந்தைகளும், கடைகளும் ஊரடங்கின் போது அடைக்கப்பட்டன.

இதுவரை இந்த கொரோனா வைரஸ் காரணமாக 7 இறப்புகள் இந்தியாவில் ஏற்பட்டுள்ளன மேலும் இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment