Advertisment

LIC News: நவம்பர் 30-க்குள் பல திட்டங்களை திரும்பப் பெறும் எல்.ஐ.சி?

LIC plans to scrap high yielding schemes from November 30 : புதிய திட்டங்கள் குறைந்த போனஸ் விகிதங்களையும் அதிக பிரீமியம் விகிதங்களையும் கொண்டிருக்கும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
LIC Schemes, LIC Policies

LIC Policies to be closed

Life Insurance Corporation of India (LIC), will reportedly close more than two-dozen individual insurance products: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி) இரண்டு டஜன் தனிநபர் காப்பீட்டு திட்டங்கள், எட்டு குழு காப்பீட்டுத் திட்டங்கள், ஏழெட்டு ரைடர்ஸ் ஆகியவற்றை நவம்பர் 30-ம் தேதியுடன் மூட உள்ளது. மூடப்படும் காப்பிட்டுத் திட்டங்களில் எல்.ஐ.சியின் சிறந்த திட்டங்களான ஜீவன் ஆனந்த், ஜீவன் உமாங், ஜீவன் லக்ஷ்யா மற்றும் ஜீவன் லாப் ஆகியவையும் உள்ளடங்கும்.

Advertisment

இந்த திட்டங்கள் அடுத்த சில மாதங்களில் காப்பீட்டு கட்டுப்பாட்டாளரின் திருத்தப்பட்ட வாடிக்கையாளர் மைய வழிகாட்டுதல்களின்படி திருத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்படும். இருப்பினும், புதிய திட்டங்கள் குறைந்த போனஸ் விகிதங்களையும் அதிக பிரீமியம் விகிதங்களையும் கொண்டிருக்கும்.  ஜூலை 8, 2019 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, புதிய இணைக்கப்படாத மற்றும் இணைக்கப்பட்ட காப்பீட்டு திட்ட விதிமுறைகளுக்கு இணங்காததால், முழுத் தொழில்துறையிலும் சுமார் 75-80 ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் நவம்பர் 30-க்குப் பிறகு நிறுத்தப்படுவதாக உயர் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் எல்.ஐ.சியின் வாடிக்கையாளர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்கு முன்பு தங்களது முகவர்களை அணுகவும்.

இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர், “சந்தையில் எந்த இடையூறும் இல்லை. காப்பீட்டாளர்கள் பணியில் உள்ளனர். இணக்கமாக இல்லாததால், 75-80 திட்டங்கள் நவம்பர் 30-க்குள் திரும்பப் பெறப்படுகின்றன. இருப்பினும், கணிசமாக அதிக எண்ணிக்கையிலான திட்டங்கள் இணக்கமாக உள்ளன. மேலும் டிசம்பர் 1 முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, தொடர்ந்து பயன்பாட்டுக்கு வரும். சில சந்தர்ப்பங்களில் பிரீமியம் விகிதங்களும் குறையக்கூடும்” என்றார்.

எல்.ஐ.சி.யின் தலைவர் எம். ஆர். குமார், "நாங்கள் சில திட்டங்களை மூடி, புதிய விதிமுறைகளின்படி மாற்றியமைத்து, பின்னர் வரும் மாதங்களில் அவற்றை மீண்டும் தொடங்குவோம்." என்றார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment