Advertisment

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படம் மாற்றமா? ரிசர்வ் வங்கி விளக்கம்

ரூபாய் நோட்டுகளில் ரபீந்திரநாத் தாகூர் மற்றும் அப்துல்கலாம் படங்களில் இடம் பெற உள்ளதாக வெளியான தகவலுக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு

author-image
WebDesk
New Update
You can still withdraw cash 3-times your salary from banks like SBI ICICI

நீங்கள் சம்பளம் வாங்குபவராக இருந்தால், ஓவர் டிராஃப்ட் வசதி தொடர்பாக வங்கியில் இருந்து பல தகவல்தொடர்புகளைப் பெற்றிருக்க வேண்டும்.

No proposal to replace face of Mahatma Gandhi on banknotes: RBI: ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று, ரூபாய் நோட்டுகளில் ரபீந்திரநாத் மற்றும் அப்துல் கலாம் படங்கள் இடம்பெற உள்ளதாக வெளியான அறிக்கைகளை நிராகரிக்கும் வகையில் திங்களன்று ரிசர்வ் வங்கி கூறியது.

Advertisment

நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படத்தை மாற்றி வேறு சிலரின் படங்களை இடம்பெறச் செய்ய, இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக சில ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"ரிசர்வ் வங்கியில் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது" என்று அந்த அறிக்கை கூறியது.

இதையும் படியுங்கள்: முகமது நபி பற்றிய சர்ச்சை கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு; ஓ.ஐ.சி-யின் கருத்துக்கள் ’குறுகிய சிந்தனை’ என இந்தியா விமர்சனம்

ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் உள்ளிட்ட பிற முக்கிய இந்தியர்களின் படங்களை சில மதிப்புகளின் ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்த நிதி அமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் யோசித்து வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment