Advertisment

வங்கிகளிடம் கவனம் தேவை: இதற்கெல்லாம் நீங்கள் அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும்!

வங்கிகள் வசூலிக்கும் 8 வித முக்கிய கட்டணங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi moratorium, sbi loans, sbi emi, sbi tamil news, sbi latest updates, எஸ்பிஐ, எஸ்பிஐ வங்கி, எஸ்பிஐ வங்கி செய்திகள், கடன், லோன்

sbi moratorium, sbi loans, sbi emi, sbi tamil news, sbi latest updates, எஸ்பிஐ, எஸ்பிஐ வங்கி, எஸ்பிஐ வங்கி செய்திகள், கடன், லோன்

வங்கிகள் என்னதான் வாடிக்கையாளர்களுக்கு எளிமையான சேவைகளை கொண்டு வந்தாலும், அவை அனைத்திற்கும் கட்டணங்களை வசூலிக்கின்றன. இதையெல்லாம் நீங்கள் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இல்லையென்றால் உங்கள் அக்கவுண்டில் இருந்து எதற்காக வங்கிகள் திடீரென்று ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாக எடுக்கின்றன என்ற விவரங்கள் உங்க்ளுக்கு தெரியாமல் போகலாம்.

Advertisment

பெர்சனல் லோன் வாங்குவதற்கு முன்பு இதையெல்லாம் தெரிந்துக் கொள்ளுங்கள்!

வங்கிகள் வசூலிக்கும் 8 வித முக்கிய கட்டணங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.

மினிமம் பேலன்ஸ்:

அனைத்து வங்கி கணக்குகளும் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காவிட்டால் வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து அபராத கட்டணத்தை வசூலிக்கின்றன.

பணம் எடுத்தல்:

நம் வங்கிகளை சாராத பிற ஏடிஎம் மையங்களில் பணம் எடுத்தல், நாம் கணக்கு வைத்துள்ள வங்கிகளின் ஏடிஎம்-ல் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தல் ஆகியவற்றிற்கு கட்டணம் வசூலிக்கின்றன.

பணம் டெபாசிட் செய்தல்:

வங்கி கணக்கு வைத்துள்ள கிளை அல்லாத பிற கிளை வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யும் பொழுது அதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுகிறது.

காசோலைகள்:

ஒரு மாதத்திற்கு ஒரு காசோலைக்கும் மேலான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படும். இதில் வெளியூர் வங்கிகளைச சேர்ந்த காசோலை பரிவர்த்தனைகளுக்குத் தனி கட்டணம்.

குறுஞ்செய்திக்கு கட்டணம்:

நம்முடைய வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பாக கைப்பேசிகளுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும்

டெபிட் கார்டுகள்:

தொலைந்து போன அல்லது திருடு போன டெபிட் கார்டுகளுக்கு பதிலாக புதிய கார்டுகளுக்கு விண்ணப்பித்தால் அதற்கென தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

dont miss it.. ஏ.டி.எம் சேவைக்கு உங்களிடம் வசூலிக்கும் கட்டணம்!

வணிகப் பரிவர்த்தனை கட்டணங்கள்:

இணையம் வழியான வணிகப் பரிவர்த்தனைகளின் போது பொதுவாக கட்டணங்கள் விதிக்கப்படுவது இல்லை. ஆனால், நம்முடைய வங்கி அல்லாத பிற நிறுவனங்கள் மூலமாக வணிக நிறுவனங்களுக்கு பணம் செலுத்தப்படும் பொழுது கட்டணம் விதிக்கப்படுகிறது.

அயல்நாட்டு பணப்பரிமாற்றம்:

கடன் அட்டை அல்லது பற்று அட்டைகளின் மூலமாக அயல்நாட்டு பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டால் 2 முதல் 4 % வரை கட்டணம் விதிக்கப்படுகிறது.

படியுங்கள்.. மியூட்சுவல் பண்ட் : பெரும்பாலோனர் செய்யும் தவறு இதுதான்!

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment