Advertisment

இந்த 3 வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை எவ்வளவு வைத்திருக்க வேணடும் தெரியுமா?

விளக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
minimum balance in top banks

minimum balance in top banks

minimum balance in top banks : வங்கி கணக்குகளில் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு குறைந்தபட்ச இருப்புத்தொகை் வைத்திருக்க வேண்டும் என்பது தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பெரும்பாலன வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்புத்தொகை எவ்வளவு இருக்க வேண்டும் என்பது குறித்த விளக்கங்கள் இல்லாது, அபாரத்தொகை பிடிக்கப்படும் போது வங்கிகளுடன் முரண்படுகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கும் வகையில் 3 வங்கிகளின் குறைந்த பட்ச இருப்புத்தொகை குறித்த விளக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

வங்கியில் இருப்புத் தொகை:

மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது வங்கி சேமிப்பு கணக்கே ஆகும். வங்கிகளில் கணக்கை வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகை குறித்து கவனத்துடன் செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாதவிடத்து வங்கிகள் அபராதம் விதிப்பதை தவிர்க்க முடியாது. இந்த அபராதத்தொகை ஒவ்வொரு வங்கிகளுக்கும் ஏற்றால் போல் மாறுபடும்.

எஸ்பிஐ வங்கி, ஹெச்டிஎப்சி ஐசிஐசிஐ ஆகிய 3 வங்கள், வங்கிக் கணக்கில் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மெட்ரோ, நகரங்கள், கிராம வங்கிகள் என்று தனித்தனியாக பிரித்து, இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

1. எஸ்பிஐ வங்கி:

இந்த எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் மெட்ரோ மற்றும் நகர வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்சம் ரூ. 3,000 வைத்திருக்க வேண்டும். நகரம் மற்றும் கிராமத்திற்கு இடைப்பட்ட செமி அர்பன்களில் இருப்பவர்கள் ரூ. 2000 வைத்திருக்க வேண்டும். அதே போல் கிராமங்களில் இருப்பவர்கள் ரூ. 1000 வைத்திருக்க வேண்டும்.

2. ஹெச்டிஎப்சி:

மெட்ரோ மற்றும் நகரங்களைச் சேர்ந்த சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 10,000 வைத்திருக்க வேண்டும். செமி அர்பனைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 5000 வைத்திருக்க வேண்டும். கிராமங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 2,500 வைத்திருக்க வேண்டும்.

3. ஐசிஐசிஐ:

இதில் மெட்ரோ மற்றும் நகரங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்தது ரூ. 10,000 வைத்திருக்க வேண்டும். செமி அர்ப்னைச் சேர்ந்தவர்கள் ரூ. 5000 வைத்திருக்க வேண்டும். கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ரூ. 2,000மும், Gramin வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ. 1,000 வைத்திருக்க வேண்டும்.

சேமிப்பு கணக்கு என்ற பெயரில் இதே வங்கிகளில் வேறு பல திட்டங்களும் உள்ளன. இந்தத் திட்டங்களில் வங்கிக் கணக்கு திறந்தால் இருப்பு வைத்திருக்க வேண்டிய அவசியல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment