பணத்தை சேமிக்க சிறந்த இடம் வங்கியா? போஸ்ட்ர் ஆபிஸ் சேமிப்பா? என்ற கேள்வி பலரிடம் எழுவது சகஜமான ஒன்று. காரணம், சிலர் வங்கியில் இருக்கும் சேமிப்பு திட்டங்கள் சிறந்தது என்றும், அதில் வரும் வட்டி விகிதம் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பை விட அதிகம் என்றும் கூறுவார்கள்.
இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பில் இருக்கு மிகச் சிறந்த சேமிப்பு திட்டங்கள் மற்றும் அவை அளிக்கும் வட்டி விகிதம் குறித்த தகவல்கள் இங்கே பிரிக்கப்பட்டுள்ளன.
அஞ்சல் அலுவலகத்தில் வங்கி கணக்குகளுக்கு இணையான சேமிப்புக் கணக்கை மிக எளிதாக தொடங்க முடியும்.நாடு முழுவதும் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் அலுவலகங்கள் உள்ள நிலையில் 20 ரூபாய் செலுத்தி சேமிப்புக் கணக்கை தொடங்க முடியும்
அஞ்சல் அலுவலகச் சேமிப்புக் கணக்கை 20 ரூபாய்க்குத் தொடங்க முடியும் என்றாலும் செக் புக் சேவை வேண்டும் என்றால் 500 ரூபாய் குறைந்தபட்ச இருப்பு தொகையை நிர்வகிக்க வேண்டும். இதுவே செக் புக் தேவையில்லை என்றால் சேமிப்புக் கணக்கில் 50 ரூபாய் இருந்தால் போதுமானது.
5 வருட அஞ்சல் அலுவலக தொடர் வைப்பு நிதி திட்டம்:
இத்திட்டத்தில் முதலீடு செய்தால் 2016 ஏப்ரல் மாதம் முதல் வருடத்திற்குக் குறைந்தபட்சம் 7.4 சதவீதம் வரை லாபம் பெறலாம். தொடர் வைப்பு நிதி திட்டமான இதில் குறைந்தது மாதம் 10 ரூபாய் முதல் முதலீடு செய்துவரலாம். மாதம் 10 ரூபாய் விதம் ஐந்து வருடம் வரை முதலீடு செய்துவரும் 600 ரூபாய்க்கு முதிர்ச்சித் தொகையாக 726.97 ரூபாய் பெறலாம்.
வருங்கால வைப்பு நிதி கணக்கு:
தபால் அலுவலகத்தில் உள்ள அனைத்து சேமிப்பு கணக்கையும் ஒப்பிடுகையில் இதுவே அதிக லாபம் அளிக்கக் கூடிய திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் மாதத்திற்குக் குறைந்தது பட்சம் 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். வருடத்திற்கு அதிகபட்சம் 1,50,000 ரூபாய் வரையிலும் முதலீடு செய்யலாம்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்தால் முதிர்ச்சி காலம் முன்பே திரும்பிப் பெறும் வசதி கிடையாது. இத்திட்டம் மூலம் பெறும் லாபத்திற்கு வரி ஏதும் கிடையாது. அதுமட்டும் இல்லாமல் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்து வரும் போது கடன் பெறும் வசதியும் உண்டு.
மிஸ் பண்ணிடாதீங்க… ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கியில் இப்படி ஒரு திட்டமா?
தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு:
தபால் அலுவலக நேர வைப்பு கணக்கில் குறைந்தது 200 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வட்டி காலாண்டு வாரியாக கணக்கிடப்பட்டு ஆண்டிற்கு ஒருமுறை வழங்கப்படும்.
1 வருடம் முதலீடு செய்பவர்களுக்கு 7.1 சதவீத லாபமும், 2 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 7.2 சதவீதம் வரை லாபமும், 3 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 7.4 சதவீதம் வரை லாபமும், 5 வருடம் வரை முதலீடு செய்பவர்களுக்கு 7.9 சதவீதம் வரை வட்டியும் லாபமாகப் பெறலாம்.
படிங்க..கனரா வங்கியின் அறிவிப்பு
5 வருட தேசிய சேமிப்பு பத்திர திட்டம்:
5 வருட தேசிய சேமிப்பு பத்திர திட்டம் தற்போது 8 சதவீத வட்டி விகித லாபத்தினை அளிக்கிறது. இன்று 100 ரூபாய் நீங்கள் முதலீடு செய்தால் 5 வருடத்திற்குப் பிறகு உங்களுக்கு 144.23 ரூபாய் கிடைக்கும். அதிகபட்ச வரம்பு என்று ஏதுமில்லை. வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Money saving best option post office or bank
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூட்டணிக் கட்சிகளை நிர்பந்திக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
குக்கரும் வேணாம்… வடிக்கவும் வேணாம்: பேச்சிலர்கள் இப்படி சாதம் செய்து பாருங்க!
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு : உங்கள் பெயரை சரிபார்க்க வேண்டுமா?
அட! நம்ம சசிகுமாரா இது? சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் மாஸ் லுக்
ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!