money savings in tamil money savings : மிடில் கிளாஸ் குடும்பங்கள் தொடங்கி முதலீடு செய்ய காத்திருக்கும் பணக்காரர்கள் வரை அனைவருக்கும் இந்த தகவல் மிக மிக பயனுள்ளது. உங்களுக்கு நிரந்த வேலை, நிரந்த வருமானம் இல்லையென்று கவலைப்படாதீர்கள். இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் கண்ணை மூடிக்கொண்டு மாதம் 1 லட்சம் வரை பென்ஷம் பார்க்கலாம். நம்புங்க.
எஸ்பிஎஸ். இந்த திட்டத்தில் எவ்வளவு முன்கூட்டியே முதலீட்டைத் தொடங்குகிறார்களோ அவ்வளவு அதிகமான லாபத்தைப் பார்க்கலாம். இந்த தேசிய பென்ஷன் திட்டம் ஒரு விருப்ப ஒய்வூதிய திட்டம். யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். 60 வ்யதுக்கு பிறகு மாதம் பென்ஷன் பெறலாம். முதலீடு செய்யும் பணத்திற்கு வரி விலக்கும் உண்டு.
அடையாள மற்றும் முகவரிச் சான்று,பிறந்த தேதிக்கான சான்றிதழ் இருந்தால் போதும். நீங்களும் விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தில், நீங்கள் முதலீடு செய்யும் பணம், ஃபிக்சட் டெபாசிட், சிறு சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் பிரித்து முதலீடு செய்யப்படும். ஒரு வேலை இந்த முதலீட்டை உங்களால் நிர்வகிக்க முடியாது என்றால் ஃபண்டு நிர்வாகிகளைத் தேர்வு செய்துக்கொள்ளாம்.ஃபண்டு நிர்வாகிகள் சந்தை சூழலுக்கு ஏற்றவாறு உங்கள் பணத்தைப் பிரித்து முதலீடு செய்து லாபம் அளிப்பார்கள்.
1000 ரூபாய் 30 ஆண்டுகள் கழித்து என்ன மதிப்பை அளிக்கும் என்பதை அறிந்து முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.
இன்று 30 வயதாகும் ஒருவர் எம்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்து அவருக்கு 60 வயதாகும் போது ஆண்டுக்கு 10 சதவீத லாபத்துடன் மாதம் 20 ஆயிரம், 30 ஆயிரம், 40 ஆயிரம், 50 ஆயிரம், 75 ஆயிரம், 1 லட்சம், 1.5 லட்சம் ரூபாய் வரை பென்ஷன் பெற முடியும். அது நீங்கள் முதலீடு செய்யும் தொகையை பொருத்தது.
ஏடிஎம்-களில் அடிக்கடி பணம் எடுப்பவர்களா நீங்கள்? இந்த விஷயம் தெரியுமா?
மாதம் 15,159 ரூபாய் முதலீடு செய்தால் 30 வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 1,50,003 ரூபாய் பென்ஷனாக பெறலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Money savings in tamil money savings idea money savings business
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!