/tamil-ie/media/media_files/uploads/2020/12/keerthana-3-3.jpg)
money savings savings money savings schemes : குழந்தை முதல் முதியவர் வரை பணத்தை சேமிப்பதற்கு நிறைய திட்டங்கள் உள்ளன
கடன் நிதி பத்திரங்களில் முதலீடு
இளைஞர்கள், தங்களின் பணத்தை கடன் நிதி பத்திரங்களில் முதலீடு செய்வது சிறந்தது என வல்லுநர்கள் கூறுகின்றனர். குறைவான வரி இழப்புடன் அதிக வருவாய் பெறுவதற்கு இந்தவகை முதலீடுகள் சிறந்தவையாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே டெப்ட் மியூட்சுவல் பண்ட்டுகளில் முதலீடு செய்தவர்கள் அந்த திட்டங்களை தொடரலாம். வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள், கடன் நிதி பத்திரங்களில் முதலீடு செய்வதற்கான சரியான நேரம் இது
இந்த திட்டத்தில் 60 வயத்துக்கும் மேற்பட்ட முதியவர்கள் பணத்தை சேமித்துக் கொள்ளலாம். ஒருவர் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் சேமிக்கலாம். வயதான தம்பதியினர் ரூ.30 லட்சம் வரை சேமிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் சேமிக்கும் பணத்துக்கு வருமான வரித்துறைச் சட்டம் 80c -ன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வங்கி சேமிப்பு கணக்குகளில் சேமிக்கப்படும் பணத்துக்கு 6.2% வட்டி அளிக்கப்படும் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு 7.4 % வட்டி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். மூத்த குடிமக்கள் இறந்துவிட்டால், உரிய சான்றுகளை சமர்பித்து நாமினி செய்யப்பட்டவர் சேமிப்பு பணத்தை எடுத்துக்கொள்ளலாம். மேலும், சில திட்டங்களும் மூத்த குடிமக்களுக்காக பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. எந்தவொரு திட்டத்திலும் வட்டி விகிதங்கள் மாற்றி அமைப்பதற்குள் முதலீடு செய்வது சிறந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us