மியூட்சுவல் பண்டில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்த சிறப்பு பகிர்வு. மியூட்சுவல் பண்ட்டில் முதலீடு செய்ய முதலில் தேவையான தகுதி பொறுமை. மியூட்சுவல் பண்ட் எப்போதும் ஆபத்து நிறைந்தவையே, இருந்தாலும் அதிக லாபத்தைக் கொடுக்கும்.
நீங்கள் அதிக வரி செலுத்துபவராக இருந்தால் வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டை தேர்ந்துடுக்கலாம். இதன் மூலம் வரிச் சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு அதிக வட்டி எனப் பல நன்மைகளைப் பெறலாம். மியூட்சுவல் பண்ட் திட்டங்கள், வங்கி வைப்புத் திட்டங்களுடன் ஒப்பிடும் பொழுது இரண்டு மடங்கு வட்டி, முதிர்வு காலத்தில் திரும்ப வரும் வருமானத்திற்கு வரிச் சேமிப்பு, வரம்பற்ற முதலீடு என எண்ணற்ற பயன்களை வழங்கும். இருப்பினும் முதலீடு செய்வதற்கு முன் உங்களின் வரி கணக்குகளை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.
சேமிப்பு பணம் குறித்த பயமே வேண்டாம்! எஸ்.பி.ஐ அறிமுகப்படுத்தியுள்ள சூப்பரான வசதிகள்
ரிஸ்க் பற்றி அதிகம் கவலைப்படுகிறவர்களுக்கு மியூட்சுவல் பண்ட் முதலீடுதான் சிறந்த வழி.ஆனால் நிறைய பேர் பயந்து ஒதுங்குவதற்கு காரணம் இந்தப் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் ஒருவேளை நஷ்டமடைந்தால் சிறுகச்சிறுக சேமித்த பணம் முழுவதும் போய்விடுமே என்கிற பயம்தான். ஆனால் இதைப் பற்றி புரிந்துகொண்டால் அனைவரும் பயனடைவதுய் நிச்சயம்.
1. ,மியூட்சுவல் ஃபண்டுகள் போல் மிகவும் வெளிப்படைத்தன்மை நிறைந்த வேறொரு முதலீட்டைக் காண்பது மிக மிக அரிது.
2. மியூச்சுவல் ஃபண்டுகள் மிகவும் பாதுகாப்பான முதலீடு. நீங்கள் குறிப்பிட்டுள்ள உங்கள் வங்கிக் கணக்கைத் தவிர, வேறு எந்தக் கணக்குக்கும் செல்லாது. எனவே நீங்கள் முதலில் பாதுகாக்க வேண்டியது வங்கி கணக்கை தான்.
3. மியூட்சுவல் பண்டுகளில் வைத்திருக்கும் தொகை எத்தனை கோடியானாலும், நீங்கள் சொன்னால் தவிர, வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. உங்கள் முதலீடு மற்றவர்களுக்கு தெரிந்து, உங்கள் நிம்மதி பறிபோய்விடுமோ என்கிற கவலை இல்லாமல். முதலில் நீங்கள் உங்கள் பணத்தொகை குறித்து வெளியில் சொல்வதை தவிர்த்து விடுங்கள்.
4. மியூட்சுவல் பண்டுகளில் முதலீடு செய்தவர்கள் ஆண்டுக்காண்டு கூட்டுவட்டி அடிப்படையில் 20 சதவிகிதத்துக்கும் மேலான வருமானத்தைச் சுலபமாகச் சம்பாதித்துள்ளார்கள். ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்குமுன் ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம் இன்று 80 லட்சத்துக்கும் மேலாக உள்ளது. இதுப் போன்ற லாபத்தை பெருக்க நீங்கள் செய்ய வேண்டியது சரியான மியூட்சுவல் பண்டுகளை தேர்ந்தெடுப்பது.
தெரியுமா? வங்கிகளிடம் கவனம் தேவை: இதற்கெல்லாம் நீங்கள் அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும்!
5. நாம் செய்யும் எந்த முதலீடாக இருந்தாலும், அது பணவீக்கத்தைத் தாண்டி வருமானம் தர வேண்டும். உதாரணத்துக்கு, பணவீக்கம் 7% என்றால், நமது முதலீட்டின் வருமானம் அதைவிட சில சதவிகிதங்கள் அதிகமாக இருக்க வேண்டும். மியூட்சுவல் பண்டுகளில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் பணவீக்கம் ப்ளஸ் லாபம் இரண்டையும் சரிவர பிரித்து கணக்கிட வேண்டும்.
6. மியூட்சுவல் பண்டுகளில் திட்டத்தைப் பொறுத்து ஒரு நாளிலோ அல்லது ஒரு வாரத்துக்குள்ளோ பணம் உங்களுக்குக் கிடைத்துவிடும். தேவைப்படுகிற அளவு நீங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அது ரூ.5,000-ஆக இருந்தாலும் சரி, ரூ.50 லட்சமாக இருந்தாலும் சரி.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:Mutual funds top mutual funds investment tips systematic investment plan sip tips