Advertisment

நில ஆவணங்களை ஆன்லைனில் தருவதன் மூலம் எளிதாகும் விற்பனை

New index tracks land records online: புது தில்லியை தளமாக கொண்ட இலாப நோக்கற்ற பொருளாதார சிந்தனை குழுவான இது பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நில ஆவணங்கள் எந்த அளவுக்கு டிஜிட்டல் மயமாக்கப் பட்டுள்ளது என்பதை மதிப்பீடு செய்யும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
New index tracks land records online, simplifying sales

New index tracks land records online, simplifying sales

Digitizing the deed: கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு இந்திய குடும்பங்களின் செல்வம் சொத்துக்களில் முதலீடு செய்யப்படுகிறது. எனினும் நிலங்கள் தொடர்பான ஆவணங்களை அணுகுவது என்பது மிகவும் கடினமானதாக உள்ளது. ஏனென்றால் மிக சில மாநிலங்களே நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கியுள்ளன. நீங்கள் ஒரு சொத்தை வாங்கும் போது அது ஒரு வீடாகவோ அல்லது இடமாகவோ இருந்தாலும் எப்போது அந்த சொத்து தொடர்பான ஆவணங்களை மறு சோதனை அல்லது சரிபார்பது என்பது எப்போதும் அறிவுறுத்தப்படுவது. எனினும் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இது போன்று செய்வது கடினமானது. ஏனென்றால் அங்கேல்லாம் நில ஆவணங்கள் குறிப்பாக சச்சரவுகள் (disputes) தொடர்பானவை டிஜிட்டல் மயமாக்கப்படவில்லை.

Advertisment

NCAER Land Record and Services Index (N-LRSI) என்ற ஒரு புதிய நில ஆவண அட்டவனை, நீங்கள் சொத்து வாங்கும் மாநிலத்தில் டிஜிட்டல் ஆவணங்கள் பராமரிக்கப்படுவதில் எவ்வுளவு திறமையாக செயல்படுகிறது என்பதை கண்டுபிடிக்க உங்களுக்கு உதவும். இந்த அட்டவனை National Council of Applied Economic Research (NCAER) ஆல் தொடங்கப்பட்டுள்ளது. புது தில்லியை தளமாக கொண்ட இலாப நோக்கற்ற பொருளாதார சிந்தனை குழுவான இது பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நில ஆவணங்கள் எந்த அளவுக்கு டிஜிட்டல் மயமாக்கப் பட்டுள்ளது என்பதை மதிப்பீடு செய்யும். Omidyar Network India என்ற சமூக தாக்கத்தில் கவனம் செலுத்தும் முதலீட்டு நிறுவனம் இந்த ஆய்வுக்கு நிதி அளிக்கிறது.

ஐஓபி இணையதள வங்கி சேவைக்கு எவ்வாறு பதிவு செய்வது?

The index

நாடுமுழுவதும் உள்ள நில ஆவணங்களை மதிப்பீடு செய்ய NCAER முதலில் Land Policy Initiative (NLPI) ஐ ஏப்ரல் 2019 ல் கொண்டுவந்தது. நில ஆவணங்கள் தொடர்பாக கிடைக்ககூடிய தகவல்களை சேகரித்து பகுப்பாய்வு செய்தல், இந்த ஆவணங்களின் தரம், ஆன்லைனில் கிடைக்ககூடிய நிலம் தொடர்பான சட்ட ஆவணங்கள், போன்றவை NLPI ன் பரந்த நோக்கங்களாகும். நிலம் தொடர்பான தரவுகளை தொகுத்து தரவுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்தையும் தரவரிசைப்படுத்துவது.

தரவரிசையில் 60 முதல் 75 புள்ளிகள் பெற்று மத்திய பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, சட்டிஸ்கர் மற்றும் தமிழ்நாடு ஆகியவை சிறப்பாக செயல்படும் மாநிலங்களாக (best performing states) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

N-LRSI, 0 முதல் 100 மதிப்பெண்கள் வரை கொடுக்கிறது, இதில் 100 மதிப்பெண்கள் சிறந்த செயல்பாட்டை குறிக்கிறது. மேற்கு வங்காளம், ஜார்க்கண்டு, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா பிரதேசம் மற்றும் உத்திர பிரதேசம் ஆகியவை 50 முதல் 60 மதிப்பெண்கள் வகையில் உள்ளன. பதிவு செய்வதில் மகாராஷ்டிரா முதலாவது இடத்தை பிடித்துள்ளது, ஜார்க்கண்டு, ஒடிசா மற்றும் சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்கள் நில ஆவணங்களின் தரத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளன.

தமிழக அரசு பட்டா மற்றும் சிட்டாவை ஆன்லைன் மூலம் பார்ப்பது எப்படி?

மிசோரம், நாகாலாந்து, மேகாலய மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் நில ஆவணங்கள் எழுத்து அல்லது டிஜிட்டல் முறையில் அந்தந்த பகுதிகளில் மிக குறைந்த விகிதத்தில் மட்டுமே கிடைக்கும்.

இந்த தரவரிசை கண்டுபிடிப்பின்படி, 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஆன்லைன் மூலம் அணுகக்கூடிய RoRs மற்றும் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஆவணங்களின் அளவு இன்னும் முழு அளவில் மேற்கொள்ளப்படவில்லை என தெரியவருகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment