பின்பி மோசடியில் சிக்கிய நிரவ் மோடியில் கார் கலெக்‌ஷன்ஸ்!

நிரவ் மோடிக்குச் சொந்தமான 1 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், 1 மெர்ஸிடஸ் பென்ஸ், 1 போர்ச் பணமெரா, 3 ஹோண்டா வகைகள், 1 டொயோட்டோ ஃபார்சூனர்,...

ஆர்.சந்திரன்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் சம்மந்தப்பட்டுள்ள நிரவ் மோடி மற்றும் மெஹூல் சொக்சி ஆகியோருக்கு சொந்தமான 94.52 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, இவர்கள் மீது நடக்கும் கருப்புப் பண வேட்டையில் நிரவ் மோடிக்குச் சொந்தமான 9 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 1 ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், 1 மெர்ஸிடஸ் பென்ஸ், 1 போர்ச் பணமெரா, 3 ஹோண்டா வகைகள், 1 டொயோட்டோ ஃபார்சூனர், மற்றும் 1 இனோவா போன்றவை அடங்கும்.

ஏற்கனவே, மும்பை, மற்றும் டெல்லி நகரத்தின் பல இடங்களில் நிரவ் மோடிக்கு சொந்தமான வைர நகை விற்பனை நிலையங்கள், அதில் உள்ள நகைகள், அலுவலகம் வீடுகள் என மொத்தம் சுமார் 6000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

இதில் நிரவ் மோடிக்கு மும்பையில் உள்ள சமுத்திரா அடுக்குமாடி வளாகத்தில் மட்டும் 6 குடியிருப்புகள் உள்ளதாகவும் அவற்றின் சந்தை மதிப்பு மட்டுமே 900 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close