Advertisment

NSC Vs பிக்சட் டெபாசிட் : வருமான வரிச் சட்டம் 80சி-யின் கீழ் வரி விலக்கு பெற சிறந்த திட்டம் எது?

மற்ற கணக்கர்களோடு ஒப்பிடுகையில் மூத்த குடிமக்களுக்கு அதிக அளவு வட்டியினை வழங்குகிறது வங்கிகள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NSC vs tax-saving FD

NSC vs tax-saving FD

NSC vs tax-saving FD

Advertisment

National Savings Certificates

NSC vs tax-saving FD :  சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஸ்கீம் தான் தேசிய சேமிப்பு பத்திரம் (National Savings Certificates) . வருமான வரிச்சட்டம் 80சியின் கீழ் இதற்கு வரி விலக்கு உண்டு. இதனை வைத்து கடனும் வாங்கலாம்.

  • அரசாங்க ஊழியர்கள், தொழில் அதிபர்கள், மற்றும் பல்வேறு துறைகளில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் இதர வருமான வரி செலுத்துவதற்காக இந்ததிட்டம் உருவாக்கப்பட்டது.
  • இந்த பத்திரத்தின் காலம் ஐந்து ஆண்டுகளாகும்.
  • வருமான வரிச்சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வருடத்திற்கு ரூ.1,00,000 வரை வரி விலக்கு பெறலாம்.
  • வட்டி விகிதம் 8%மாக உள்ளது
  • இதற்கு டி.டி.எஸ் பிடித்தம் கிடையாது
  • இந்த பத்திரம் அரசாங்கத்தால் வழங்கப்படுவதால் மிகவும் பாதுகாப்பானதாகும். ஒவ்வொரு நிதி ஆண்டிலும் ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பாக வட்டி விகிதத்தை அரசு அறிவிக்கும்.
  • தபால் அலுவலகத்தில் இருந்து வழங்கப்படுவதால் ஒரு தபால் நிலையத்தில் இருந்து மற்றொன்றிற்கு மாற்றம் செய்து கொள்ள இயலும். சிதைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ டூப்ளிகேட் வழங்கப்படும்.
  • தேசிய சேமிப்பு பத்திரம் வாயிலாக கிடைக்கும் வட்டிக்கு நாம் வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

NSC vs tax-saving FD

பிக்சட் டெபாசிட் (Fixed Deposit)

  • தற்போதைய வருமான வரிச் சட்டத்தின் படி 80சி வருமான வரி சட்டப்பிரிவின் கீழ் வைப்பு நிதிகளில் முதலீடு செய்தால், வரி சேமிப்பு செய்யலாம்.
  • தனிநபர் மற்றும் கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் இந்த வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
  • வங்கிகளைப் பொறுத்து வைப்பு நிதிகளின் குறைந்த பட்ச வரம்பும், வட்டி விகிதமும் வேறுபடும்.
  • இந்த வைப்பு நிதிகளுக்கான லாக் - இன் ப்ரீயட் 5 வருடம் ஆகும். இந்த முதிர்வு காலத்திற்கு முன்பு டெபாசிட் பணத்தை திரும்பப் பெறவோ, கடன் பெறவோ இயலாது.
  • இதில் இருந்து பெறப்படும் வட்டி, முதலீடு செய்பவர்களின் வரி அடைப்புக்குறிக்குள் வருவதால், டி.டி.எஸ் செலுத்த வேண்டும்.
  • எஸ்.பி.ஐ வங்கி வரி சேமிப்பு வைப்பு நிதிகளுக்கு 6.85% வட்டி அளிக்கிறது.
  • தனியார் வங்கிகளான ஐ.டி.எஃப்.சி போன்ற வங்கிகள் 8.25% வரை வட்டிகளை வழங்குகிறது.
  • மற்ற கணக்கர்களோடு ஒப்பிடுகையில் மூத்த குடிமக்களுக்கு அதிக அளவு வட்டியினை வழங்குகிறது வங்கிகள்.

மேலும் படிக்க : SBI Minimum Balance Rules: வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ வங்கியின் மினிமம் பேலன்ஸ் அறிவிப்பு

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment