Advertisment

மாதச் சம்பளம் போல ரெகுலர் வருமானம்: SBI-யில் இந்த ஸ்கீமை பாருங்க!

வருடாந்திர வைப்புத் திட்டத்தில் முதலீட்டாளர் ஒரு முறை மொத்த முதலீட்டு தொகையை செலுத்தினால், சமமான மாதாந்திர தவணைகளில் அவற்றை திரும்ப பெறலாம்.

author-image
WebDesk
New Update
SBI Bank

Business News in Tamil : பாரத ஸ்டேட் வங்கியில், வருடாந்திர வைப்புத் திட்டத்தில் முதலீட்டாளர் ஒரு முறை மொத்த முதலீட்டு தொகையை செலுத்தினால், சமமான மாதாந்திர தவணைகளில் அவற்றை திரும்ப பெறலாம். இதில், மாதத் தவணையின் மூலம் நீங்கள் பெறும் தொகையானது, உங்களின் முதலீட்டுத் தொகையில் ஒரு பகுதியையும், வட்டியையும் உள்ளடக்கியது ஆகும்.

Advertisment

எஸ்பிஐ வருடாந்திர வைப்புத் திட்டத்தில் யார் இணையலாம்?

சிறுபான்மையினர் உட்பட எந்தவொரு நபரும் எஸ்பிஐ வருடாந்திர வைப்புத் திட்டத்தில் சேரலாம். கணக்கு வைத்திருப்பவர் தனிநபராகவோ அல்லது கூட்டு கணக்காகவோ இருக்கலாம். என்.ஆர்.இ அல்லது என்.ஜி.ஓ பிரிவுகளில் உள்ள எந்தவொரு வாடிக்கையாளரும் எஸ்பிஐ வருடாந்திர வைப்புத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற இயலாது.

எஸ்பிஐ வருடாந்திர வைப்புக்கான குறைந்தபட்ச வைப்புத் தொகை,மாதம் ரூ .1000 அடிப்படையில் செலுத்தி வரலாம். அதாவது 3 வருடங்களுக்கு, குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ. 36,000 செலுத்தியிருக்க வேண்டும். இதற்கான அதிகபட்ச வரம்பு என்பது இல்லை. எஸ்பிஐயின் இந்த திட்டத்தை 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள், 7 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு என பல்வேறு தவணைகளில் முதலீடு செய்யலாம்.

எஸ்பிஐ வருடாந்திர திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதமானது, பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களுக்கு நிகரானது ஆகும். தற்போது, ​​எஸ்பிஐ ஐந்து முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்த வைப்புகளுக்கு 5.40% வட்டி விகிதத்தை அளித்து வருகிறது. மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் முதிர்ச்சியடையும் எஃப்.டி.களுக்கு, எஸ்பிஐ 5.30% வட்டி விகிதத்தை அளிக்கிறது.

வருடாந்திர வைப்பு கணக்கைத் திறக்க நீங்கள் சேமிப்பு, நடப்பு அல்லது OD கணக்கை பற்று வைக்கலாம். பிக்ஸட் டெபாசிட்டுகளைப் போலவே, மூத்த குடிமக்களும் எஸ்பிஐ வருடாந்திர திட்டத்தில் வட்டி விகிதமானது, மற்றவர்களை காட்டிலும் 1% அதிகமாக இருக்கும். எஸ்பிஐ-யின் வலைத்தளத்தின்படி, வருடாந்திர நிலுவைத் தொகையில் 75 சதவீதம் வரை ஓவர் டிராஃப்ட் அல்லது கடன் வழங்க முடியும். கடன் வழங்கப்பட்ட பிறகு, மேலும் வருடாந்திர கட்டணம் கடன் கணக்கில் மட்டுமே டெபாசிட் செய்யப்படுகிறது. அருகிலுள்ள, எஸ்பிஐ கிளைகளை அணுகி, வருடாந்திர வைப்பு கணக்கை தொடங்கி பயன் பெறலாம்.

இத்திட்டத்தால், முதலீட்டாளர்கள் ஒரு முறை முதலீடு செய்தாலே போதுமானது. மாதம் தவறாமல் சம்பளம் போல, உங்களுக்கு ரெகுலர் வருமானம் கிடைக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” ( https://t.me/ietamil )

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment