அப்ளை பண்ண 2 நாட்களில் இ-பான் கார்ட்... எப்படி ? எங்கு?

ஆதாரச் சான்றுகள் தேவையில்லை.

pan card form : உடனடியாக இ-பான் கார்டு பெறும் வசதியை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இ-பான் கார்டு பெற எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. Incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் இ-பான் கார்டை பெறலாம்.

இ-பான் கார்டை பெற ஆதார் அட்டை வைத்திருப்பது அவசியம். இது வசதி குறுகிய காலத்துக்கு மட்டுமே இருக்கும். முதலில் விண்ணப்பிப்போருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஏற்கெனவே பான் கார்ட் வைத்திருப்பவர்கள் இ-பான் கார்ட் பெற முடியாது.

இ-பான் கார்ட் பெறுவது குறித்து தெரிந்து கொள்ள 10 விஷயங்கள்

1. பான் கார்ட் வைத்திருக்கும் ஒருவர், இ-பான் கார்ட் பெற முடியாது.

2. தனி நபர் மட்டுமே இந்த இ-பான் கார்டை பெற முடியும். குடும்பங்களோ, நிறுவனங்களோ பெற முடியாது.
ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் இருக்க வேண்டும். ஓடிபி மூலம் ஆதாரம் உறுதி செய்யப்படும்.

3. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணை உறுதி செய்ய uidai.gov.in என்ற இந்த இணையதளத்துக்கு செல்லுங்கள் ஆதாரின் இ- கே.ஒய்.சி உறுதி செய்யப்பட்டபின், இ – பான் கார்டை பெற முடியும்.

4. ஆதார் அட்டையில் உள்ள தகவல்களைப் பொருத்தே இ – பான் கார்ட் கொடுக்கப்படும்.
பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற தகவல்களில் பிழை இருந்தால்,uidai.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று திருத்திக் கொள்ளுங்கள்.

5. இ-பான் கார்டை பெற விண்ணப்பதாரரின் கையொப்பம் வெள்ளை காகிதத்தில் இடப்பட்டு, ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும். 200 டி.பி.ஐ, அதிகபட்சம் 10 கே.பி அளவு கொண்ட படமாக இருக்க வேண்டும்.

6. இது ஆன்லைன் நடைமுறை என்பதால் இ-பான் பெற பேப்பர் ஆதாரச் சான்றுகள் தேவையில்லை.
சரியான முறையில் விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டதை உறுதி

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close