Advertisment

வீட்டுக் கடனுக்கு EMI கட்டுகிறீர்களா? இதனை பின்பற்றினால் நிறைய பணத்தை சேமிக்கலாம்!

நீங்கள் ஒரு வங்கியில் நீண்டகாலமாக வாடிக்கையாளராக இருந்திருந்தால் உங்களால் குறைவான வட்டியை கோர முடியும். ஆனால் நீங்கள் வாங்கியுள்ள கடன் மதிப்பை பொறுத்து அது மாறுபடும்.

author-image
WebDesk
New Update
ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய விருப்பமா? அப்போ இந்த 5 விஷயத்துல கவனமா இருங்க!

Paying home loan EMIs : 40 வயதிற்குள் சொந்த வீடு என்பது நம் அனைவரின் கனவு. பலரும் அதற்காக அதிக அளவில் உழைப்பதும் திட்டங்களை தீட்டுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. வீட்டிற்கான கடனும் அதனை முறையாக திருப்பி செலுத்துவதும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பல நேரங்களில் வருமானத்தில் பெரும் அளவு பணத்தை இ.எம்.ஐ.யாக செலுத்தும் போது அது மிகப்பெரிய விசயமாக இருக்கிறது. ஆனால் அதனை செலுத்தும் போது பணத்தை மிச்சப்படுத்த முடியாது என்று அர்த்தமில்லை. அதற்கு நிறைய வழிமுறைகளும் உள்ளன.

Advertisment

பணத்தை முன்கூட்டியே செலுத்துதல்

வீட்டுக் கடன்களுக்காக இ.எம்.ஐ. செலுத்துவது மிக நீண்ட கால திட்டமாகும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேலாவது ஆகும். சில நேரங்களில் பணத்தை முன் கூட்டியே செலுத்துவது கூட நல்ல முடிவாக இருக்கலாம். ஆனால் வட்டியில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் வங்கிக் கொள்கைகள் அந்த தேர்வை கொஞ்சம் கடினமாக மாற்றிவிடும். இருப்பினும் முன் கூட்டியே பணத்தை செலுத்துவது உங்களுக்கு நிறைய வழியில் உதவும்.

முன் கூட்டியே பணத்தை செலுத்துவதன் மூலம், மீதம் இருக்கும் அதிகப்படியான பணத்திற்கு செலுத்தும் வட்டி குறைந்துவிடும். ஆனால் அதற்கு முன்பு உங்கள் வங்கியில் வசூலிக்கப்படும் ப்ரீபேமெண்ட் கட்டணம் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

குறைவான வட்டிக்கு கோரிக்கை வைத்தல்

நீங்கள் ஒரு வங்கியில் நீண்டகாலமாக வாடிக்கையாளராக இருந்திருந்தால் உங்களால் குறைவான வட்டியை கோர முடியும். ஆனால் நீங்கள் வாங்கியுள்ள கடன் மதிப்பை பொறுத்து அது மாறுபடும்.

கடன் வாங்குவதற்கு முன்பு ஆய்வு செய்யுங்கள்

பல வங்கிகளில் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் ஒரே மாதிரியாக தான் இருக்கும். ஆனால் மற்ற கட்டணங்களில் மாறுபாடுகள் இருக்கும். முறையாக அது குறித்து ஆய்வு செய்யாமல் இறங்கினால் வீட்டுக்கடன் என்பது மிகவும் அதிக பணத்தை திருப்பி செலுத்தும் கடனாக இருக்கும். வீட்டுக்கடன் தொடர்பான அனைத்து தகவல்களும் நிச்சயமாக ஆன்லைனில் இருக்கும் எனவே நீங்கள் அனைத்து தகவல்களையும் முன் கூட்டியே அறிந்து கொள்ள இயலும்.

கடனை பெறுவதற்கு முன்பு முதலீடு செய்யுங்கள்

அதிக அளவில் டவுன் பேமெண்ட் செலுத்தும் போது, நீங்கள் வாங்கும் கடனின் மதிப்பானது குறைவாக இருக்கும். குறைவான வங்கிக் கடன் என்பது குறைவான வட்டிக்கு வழி வகுக்கும். எனவே முன் கூட்டியே சேமிக்க துவங்கிவிடுங்கள். பல்வேறு முக்கியமான சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து உங்களின் பணத்தை இரட்டிப்பாக்கும் வழிமுறை என்பதை ஆராய்வது உங்களுக்கு அதிக அளவு கை கொடுக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment