Advertisment

பேடிஎம் யூஸ் பண்றீங்களா? அப்போ இந்த ஆப்பை எல்லாம் மறந்து கூட யூஸ் பண்ணாதீங்க!

’பேடிஎம்’ வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், AnyDesk அல்லது Quicks Port உள்ளிட்ட ஆப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாமென கேட்டுக் கொண்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Paytm warning for its users

Paytm warning for its users

Paytm Warning: நீங்கள் Paytm கணக்கு வைத்திருப்பவரா? பெரும்பாலும் வங்கி கணக்கு மூலம் ஆன்லைனில் பரிவர்த்தனை செய்கிறீர்களா? அப்படியெனில் வங்கிக் கொள்ளையர்களிடமிருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது பற்றிய சமீபத்திய அறிவிப்பில், ஆன்லைன் வங்கி மோசடிகள் குறித்து தங்களிடம் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், மோசடி செய்பவர்களிடமிருந்து எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்குமாறு ‘பேடிஎம்’ கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisment

அதிகரித்து வரும் ஆன்லைன் வங்கி மோசடிக்கு மத்தியில், மொபைல் வாலட் நிறுவனமான ’பேடிஎம்’, டெட்லைன் நெருங்கிக் கொண்டிருப்பதால், பயனர்கள் தங்களது KYC-யை அப்டேட் செய்யும் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது. உங்களது மொபைல் வேலட்டை உங்களது வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால், இது நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும்.

’பேடிஎம்’ வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், AnyDesk அல்லது Quicks Port உள்ளிட்ட ஆப்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாமென கேட்டுக் கொண்டுள்ளது. மொபைல் வேலட்டை வங்கி கணக்குடன் இணைத்திருந்தால், குறிப்பாக கே.ஒய்.சி விபரங்களை நிரப்பும்போது மேற்கூறிய செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டாமென பேடிஎம் கூறியுள்ளது. எக்ஸிக்யூட்டிவை ஆன்லைனில் தொடர்பு கொண்டு, மொபைல் வேலட்டைப் பயன்படுத்தி கே.ஒய்.சி விபரங்களை பயனர்கள் பூர்த்தி செய்யுமாறு தெரிவித்துள்ள பேடிஎம், இவ்வாறான முறையினால் எந்த விதமான மோசடியையும் தவிர்க்கலாம் என்று தெரிவித்துள்ளது.

டீம் குவெர், எனிடெஸ்க் மற்றும் குயிக்ஸ் போர்ட் போன்ற ரிமோட் ஆப்களை பயன்படுத்தி, மொபைல் வேலட்டை வங்கிக் கணக்குடன் இணைத்திருப்பவர்களிடமிருந்து மோசடிக்காரர்கள் பணம் திருடியதாக பல செய்திகள் தெரிவிக்கின்றன. தவிர, ரிசர்வ் வங்கி, எச்.டி.எஃப்.சி, எஸ்பிஐ உள்ளிட்ட பல வங்கிகளும் ஆன்லைன் வங்கி மோசடிகள் குறித்து பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கையை ஏற்கனவே வெளியிட்டிருந்தன, ஆனாலும், மக்கள் இன்னும் ஏமாந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

Paytm - KYC Deadline

இந்த மாத இறுதிக்குள் அதாவது ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் பயனர்கள் KYC-ஐ பூர்த்தி செய்யவில்லை எனில், அடுத்த மாதத்திலிருந்து அதாவது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கு அவர்கள் பேடிஎம் வேலட்டை பயன்படுத்த முடியாது.

Paytm
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment