Advertisment

உங்கள் தேவைக்கு எந்த கடன் சிறந்தது..!

தனிநபர் கடனை 5 வருடங்களுக்குச் செலுத்த வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
personal loan:

personal loan

தங்க கடன் மற்றும் தனிநபர் கடன் என்ற இரண்டுக்கும் ஒரே அளவிலான வட்டி விகிதத்தில் தான் கடன் அளிக்கப்படுகிறது. மேலும் தங்கம் வைத்துள்ளவர்கள் வேகமாகவும்,வரம்புகள் ஏதுமின்றியும் கடன் பெற முடியும். அதே போல் தனிநபர் கடனில் நிபந்தனை அல்லது தங்கத்தை அடைமானமாகப் பெறாமல் சில நாட்களில் கடன் பெற முடியும்.

Advertisment

இந்நிலையில் தனிநபர் கடன் மற்றும் தங்க கடனில் உங்கள் தேவைக்கு எது சிறந்தது

என்பதை அறிந்துகொள்ளுங்கள். எவ்வளவு கடன் பெற முடியும்? அதிகபட்சம் 1.5 கோடி ரூபாய் வரை தங்கள் கடன் அளிக்கப்படும் நிலையில் தனிநபர் கடன் 40 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே அளிக்கப்படுகிறது.

உடனடி பணம் தேவைக்கு தங்க கடனே கிடைக்கும். தங்கள் கடனை 1000 ரூபாய் முதல்

பெற முடியும். ஆனால் தனிநபர் கடன் வேண்டும் என்றால் குறைந்தது 5000 ரூபாயினைக் கடனாகப் பெற வேண்டும். கிரெடிட் ஸ்கோர் தங்க நகர் கடன் வாங்கும் போது அதுவே உத்தரவாதம் என்பதால் கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்டவை பெரியதாகக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

ஆனால் அதிக மதிப்புடைய கடன் பெறும் போது கண்டிப்பாகக் கிரெடிட் ஸ்கோர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதில் தனிநபர் கடனுக்குக் கண்டிப்பாகக் கிரெடிட் ஸ்கோர் தேவைப்படும். கிரெடிட் ஸ்கோரினை அடிப்படையாகக் கொண்டு வட்டி விகிதம் மற்றும் கடனை செலுத்தும் கால அளவு

மாறும்.

இதில் குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தால் கடன் விண்ணப்பம் இரத்தாக வாய்ப்புண்டு.மேலும் கடனுக்கு அடையாள மற்றும் முகவரி ஆவணத்தினைச் சமர்ப்பித்தால் போதும் உடனேகடன் கிடைக்கும். ஆனால் முகவரி மற்றும் ஆவணங்கள் , வருமான ஆவணம், வங்கி அறிக்கை போன்றவை வழங்க வேண்டும். தங்க நகை கடன் வழங்குபவர்கள் அதனைத் திருப்பிச் செலுத்த பல்வேறு வகையில் வளைந்து இடம் கொடுப்பார்கள்.

வட்டி விகிதம், மாதம் போன்றவற்றில் சலுகைகள் கிடைக்கும். இது போன்றவை தனி நபர் கடன் வாங்கும் போதுகிடைக்காது. தனிநபர் கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை தங்க நகை கடன் பெரும்பாலும் 3 வருடங்களுக்குள் செலுத்த வேண்டும். இதுவே தனிநபர் கடனை 5 வருடங்களுக்குச் செலுத்த வேண்டும்.

அதற்கு ஏற்றார் போல வட்டி விகிதம் உயரும். தங்களது வருமானத்தைப்பொருத்து கால அளவில் கடனை பெறலாம். தங்க நகை அடைமான கடன் பெறும் போது தங்கத்தினை வங்கியில் சமர்ப்பித்து அதன் சுத்தம் மற்றும் மதிப்பினை கணக்கிட்ட பிறகே கடன் பெற முடியும். ஆனால் இன்றைய ஸ்மார்ட் உலகில் வீட்டில் உட்கார்ந்த படியே தனி நபர் கடனுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வங்கி அதிகாரிகளை வீட்டிற்கு வரை வைத்து நாம் வங்கி கிளைக்குச் செல்லாமல் கடனை பெற முடியும்.

அப்பளை செய்த 5 நிமிடத்தில் அக்கவுண்டில் பணம்! பர்சனல் லோனில் அசத்தும் எஸ்பிஐ

எது உங்களுக்கு ஏற்ற கடன்? தனிநபர் கடன் அல்லது தங்க நகை கடன் இரண்டில் எதைத்தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியதது கடன் பெற இருப்பவர் தான்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment