அவசரமா லோன் வேணுமா? அப்போ இந்த ஆப்களை டவுன்லோடு பண்ணுங்க!

இதை பயன்படுத்தி மருத்துவக் காப்பீடு, கார் அல்லது இருசக்கர வாகன காப்பீடு போன்றவற்றை பெற முடியும்.

Personal Loan Mobile Apps to get instant loans : வாடிக்கையாளர்களின் நலன் கருதி, தற்போது உடனடி பணத்தேவைக்கு கடன் வழங்கும் 5 பெஸ்ட் ஆப்ஸ்கள் அறிமுக்கப்படுத்தப்பட்டுள்ளது.

Top Five Personal Loan Mobile Apps

1.ஸ்மார்ட் காயின் (Smart Coin)
2.கேபிடல் பர்ஸ்ட்(Capital First)
3.கிரீடி (Credy)
4.கேஷ் இ (Cash E)
5.கேஷியா (Cashiya)

இந்த 5 பெஸ்ட் ஆப்ஸ்கள் தான் ஸ்மார்ட்காயின் செயலியில் வாடிக்கையாளர் விரும்பும் கடனை வழங்குகின்றது.

ஸ்மார்ட் காயின் (Smart Coin)

ஸ்மார்ட் காயின் செயலியை பயன்படுத்தி கடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்த உடனேயே, தனிநபர் கடன் பெறலாம். இந்த செயலியில் வங்கி தகவல்கள், அடையாள ஆவணம், கடன் தொகையை மட்டும் பதிவேற்றம் செய்தால் போதும். ஸ்மார்ட்காயின் செயலியில் ரூ.1000 முதல் ரூ.50,000 வரை கடன் கிடைக்கும்.

கேபிடல் பர்ஸ்ட்(Capital First)

தொழில் கடன் அல்லது வாகனக் கடன் என அனைத்தையும் விண்ணப்பிக்க ‘கேபிடல் பர்ஸ்ட் செயலி தனிநபர் கடன்’ அனுமதிக்கும். கடன் சம்பந்தப்பட்ட அனைத்து வித தகவல்கள், கடன் சலுகைகள் குறித்த அறிவிப்புகள் என எல்லாம் அடிக்கடி தெரியப்படுத்தப்படும்.

கிரீடி (Credy)

இதில் ரூ.10,000 முதல் ரூ.1,00,000 வரை கடன் வழங்கபப்டுகிறது. இந்த செயலியில், வெறும் ஒரு நிமிடத்தின் கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுகிறது. மாதம் 1 – 1.5% வரை வட்டி விதிக்கப்படுகிறது.

குறிப்பாக வாடிக்கையாளரின் மாத சம்பளம் குறைந்தபட்சம் ரூ.15,000 இருக்க வேண்டும். சென்னை அல்லது பெங்களூரில் வசிக்கும் நபராக இருக்க வேண்டும் என்பதும் விதி.

கேஷ் இ (Cash E)

15 நாட்கள் என்ற மிக குறுகிய காலத்திற்கு கடன் வழங்கும் செயலியாக கேஷ் இ உடனடி கடன் உள்ளது.  இது ரூ.10,000 முதல் ரூ.2,00,000 என்ற வரம்பில் கடன் வழங்குகிறது. பான் எண், முகவரி ஆவணம், சமீபத்திய சம்பள சான்றிதழ், வங்கிக்கணக்கு ஆவணம் போன்ற 5 ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

கேஷியா (Cashiya)

கேஷியா செயலி, குறுகிய கால தனிநபர் கடனை வழங்குவது மட்டுமில்லாமல், வரவு மற்றும் செலவுகளை மேலாண்மை செய்யவும் இது பயன்படுகிறது.இதை பயன்படுத்தி மருத்துவக் காப்பீடு, கார் அல்லது இருசக்கர வாகன காப்பீடு போன்றவற்றை பெற முடியும்.

மேலும் முதலீடுகள் மற்றும் பணி ஓய்வு பெற்றபின் இருக்கும் சேமிப்புகள் போன்றவற்றையும் திட்டமிட முடியும்.

மேலும் படிக்க : அவசர காலத்தில் எந்த வங்கியில் விரைவில் கடன் பெறலாம்?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close