Advertisment

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ9.5, டீசல் ரூ7 குறைப்பு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்ததன் மூலம் விலையைக் குறைத்த மத்திய அரசு; காஸ் மானியம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ9.5, டீசல் ரூ7 குறைப்பு

Centre rolls out measures to stem inflation, cuts excise duty on petrol, diesel: பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில், பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது.

Advertisment

“பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம். இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என்றும், இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும்” மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மாநில அரசுகளும் இதேபோன்று பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என நிதியமைச்சர் வலியுறுத்தினார். "அனைத்து மாநில அரசுகளையும், குறிப்பாக கடைசிச் சுற்றில் (நவம்பர் 2021) வரி குறைப்பு செய்யப்படாத மாநிலங்களையும், இதேபோன்ற குறைப்பைச் செயல்படுத்தி, சாமானியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு நான் அறிவுறுத்த விரும்புகிறேன்," என்று நிதியமைச்சர் கூறினார்.

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் ஒன்பது கோடி பயனாளிகளுக்கு ஒரு காஸ் சிலிண்டருக்கு (12 சிலிண்டர்கள் வரை) 200 ரூபாய் மானியமாக அரசாங்கம் வழங்கும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.

“உலகளவில் உரங்களின் விலை உயர்ந்து வரும் போதிலும், விலை உயர்விலிருந்து நமது விவசாயிகளைக் காப்பாற்றியுள்ளோம். பட்ஜெட்டில் உர மானியம் ரூ1.05 லட்சம் கோடிக்கு கூடுதலாக, மேலும் ரூ.1.10 லட்சம் கோடி நமது விவசாயிகளை மேலும் மேம்படுத்துவதற்காக வழங்கப்படுகிறது, ”என்று நிதியமைச்சர் கூறினார்.

இந்தியாவின் இறக்குமதி சார்ந்து அதிகம் உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கான மூலப்பொருட்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீதான சுங்க வரியையும் அரசாங்கம் குறைத்து வருகிறோம். சில எஃகு மூலப்பொருட்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும். சில எஃகு பொருட்களுக்கு ஏற்றுமதி வரி விதிக்கப்படும், என்று நிதியமைச்சர் கூறினார்.

இவை தவிர, சிமென்ட் கிடைப்பதை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் நிதியமைச்சர் கூறினார்.

இதையும் படியுங்கள்: காங்கிரஸ் ‘பிக் டாடி’ இல்லை; மாநிலக் கட்சிகளின் எதிர்ப்புக்கு ராகுல் காந்தி விளக்கம்

பிரதமர் மோடி தலைமையிலான அரசை பாராட்டிய நிர்மலா சீதாராமன், “எங்கள் அரசு, பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து, ஏழைகளின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு உதவ நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதன் விளைவாக, எங்கள் ஆட்சிக் காலத்தில் சராசரி பணவீக்கம் முந்தைய அரசாங்கங்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது. உலகின் பிற பகுதிகளைப் போலவே இந்தியாவும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டபோதும் அரசாங்கம் மக்கள் நலத்திட்டங்களுக்கான முன்னுதாரணத்தை அமைத்தது. தொற்றுநோயின் போது கூட, எங்கள் அரசாங்கம் மக்கள் நலத்திட்டங்களை வழங்கியது, குறிப்பாக பிரதம மந்திரி கரிப் கல்யாண் திட்டம். இது இப்போது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுகிறது, என்று நிதியமைச்சர் கூறினார்.

“சவாலான சர்வதேச சூழ்நிலை இருந்தபோதிலும், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை/தட்டுப்பாடு இல்லை என்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். ஒரு சில வளர்ந்த நாடுகள் கூட சில தட்டுப்பாடு/ இடையூறுகளில் இருந்து தப்ப முடியவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றும் நிதியமைச்சர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Petrol Diesel Rate Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment