scorecardresearch

PF Alert: இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… பணம் காணாமல் போகும் அபாயம்

பிஎஃப் உறுப்பினர்கள் செய்யும் இந்தத் தவறால் அவர்களது பணம் அனைத்தும் காணாமல் போய்விடும் என்று EPFO எச்சரித்துள்ளது.

PF Alert: இந்தத் தவறை மட்டும் செய்யாதீங்க… பணம் காணாமல் போகும் அபாயம்

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO),அதன் கோடிக்கணக்கான சந்தாதாரர்களுக்கு ஆன்லைன் மோசடிகளில் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைன் மோசடி கும்பலிடமிருந்து கணக்கை பாதுகாப்பதற்கான வழிகளைப் EPFO பகிர்ந்துள்ளது.

இதுதொடர்பாக EPFO வெளியிட்ட அறிக்கையில், ” EPFO அமைப்பிலிருந்து சந்தாதாரர்களை தொலைபேசி வாயிலாகவோ அல்லது சமூக ஊடகங்கள் வாயிலாகவோ தொடர்புகொண்டு, ஆதார்,பான் கார்டு, வங்கி கணக்கு, ஓடிபி போன்ற தகவல்கள் ஒருபோதும் கேட்கப்படாது.

EPFO அதிகாரிகள் என்ற போர்வையில் உங்களை தொடர்புகொண்டு தனிப்பட்ட தகவல்களை கேட்கும் அழைப்புகளுக்கு எவ்வித பதிலும் அளிக்காதீர்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகவல் கேட்டு அழைப்பு வந்தால் என்ன செய்யனும்?

உங்களின் UAN விவரங்கள், ஆதார் அல்லது பான் கார்டு தகவலை கேட்டு EPFO அதிகாரிகள் என அழைப்பு வந்தால், உடனடியாக EPFO அலுவலகத்திற்கு புகாரளிக்க வேண்டும். EPFO இன் அதிகாரப்பூர்வ தளத்தில் http://www.epfindia.gov.in. தகவல் தெரிவிக்கலாம். இல்லையெனில், EPFO ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் தொடர் கொள்ளலாம்.

பான், ஆதார் மற்றும் ஆவணங்களை பாதுகாப்பாக வைப்பது எப்படி?

ஆன்லைன் மோசடிகளைத் தவிர்க்க, EPFO உறுப்பினர்கள் அவற்றை DigiLocker இல் வைக்கலாம். DigiLocker என்பது ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை சேமிப்பதற்கும் பகிர்வதற்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது ஆகும்.

உங்கள் மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணைக் கொண்டு DigiLocker இல் எளிதாக பதிவு செய்யலாம். நீங்கள் டிஜிலாக்கரில் வைத்திருக்க விரும்பும் ஆவணங்களைப் பதிவேற்றலாம். ஆவணங்களை PDF, JPEG மற்றும் PNG போன்ற பல்வேறு பைல்களில் பதிவேற்றலாம். DigiLocker இல் அதிகபட்சம் 10 MB பைல்கள் பதிவேற்ற அனுமதிக்கப்படும்.

E nomination அப்டேட்

இதுதவிர, E nomination செய்வதும் தொடர்பாகவும் EPFO அறிவுறுத்தியுள்ளது. அதில், ஜனவரி மாதத்தில் 16 லட்சத்துக்கும் அதிகமான EPFO சந்தாதாரர்கள், E nomination செய்வதுள்ளனர். எனவே, இன்றே இ – நாமினேஷனை தாக்கல் செய்து, உங்கள் குடும்பம்/நாமினிக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Pf alert epfo asks to avoid these mistakes or you will lose money

Best of Express