வீடு தேடி வரும் பெட்ரோல், டீசல் திட்டம்: விரைவில் அறிமுகம்!

விமானம் மூலம் டீசலை டெலிவரி செய்யும் திட்டத்தை சோதனை செய்து வருகிறோம்

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால், வீட்டிற்கே பெட்ரோல், டீசல் டோர் டெலிவரி செய்யப்படும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது.

கடந்த 2017 ஆண்டு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால், பெட்ரோல், டீசல் ஆகியவை வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படும் வசதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியாகி 1 வருடம் கடந்த நிலையில், தற்போது இந்த திட்டம் கூடிய விரைவில் செயல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரின் பெட்ரோல் – டீசல் ஹோம் டெலிவரி அறிவிப்பு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இன்றைய தொழில்நுட்ப உலகில் வெளியில் சென்று எந்த பொருளையும் வாங்க வேண்டிய நிலை பெருமளவில் குறைந்து விட்டது. வீட்டில் இருந்தபடியே எதை வேண்டுமானலும் ஆர்டர் செய்து வாங்கி விடலாம். இந்த வசதி பெட்ரோல்- டீசலில் வர போகிறா? என எண்ணி மக்கள் வியப்படைந்தனர். இந்நிலையில், இந்த திட்டம் முதலில் பெங்களூருவில் தொடங்கி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகின. அதன் பின்பு, பாதுகாப்புகள் கருதி அந்த திட்டம் தடைப்பட்டது.

இந்நிலையில், டீசலை விமானம் மூலம் தனியாக கொண்டு சென்று குறிப்பிட்ட இடத்தில் டெலிவரி செய்யும் வசதியை மத்திய அரசு பயன்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதுக்குறித்து பேசிய ஐ.ஓ.சி. தலைவர் சஞ்சீவ் சிங் “மத்திய அரசின் பெட்ரோல் – டீசல் ஹோம் டெலிவரி திட்டம் வரவேற்க தக்கது. இருப்பினும் இதற்கான ஆய்வுகள் முறையாக மேற்கொள்ள வேண்டும். நாங்கள், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் விமானம் மூலம் டீசலை டெலிவரி செய்யும் திட்டத்தை சோதனை செய்து வருகிறோம். இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய இரண்டு நிறுவனத்திற்கு மட்டும் தற்போது உரிமம் வழங்கியுள்ளோம். இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்த பின்பு கூடிய விரைவில், செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆனால் தற்போது வரை இந்த சோதனையை செய்யும் இடங்களை நாங்கள் தேர்வு செய்யவில்லை. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு ஒன்று, தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளது. விமான சோதனைக்கு பின்னரே, முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close