Advertisment

2022-ல் வீடு வாங்கணுமா? பெரிய நகரங்களில் லட்சக் கணக்கில் ரெடியாகும் ஃப்ளாட்ஸ்!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் லட்சக்கணக்கில் வீடுகள் தயாராகி வருகின்றன. வீடு வாங்க விரும்புபவர்களுக்கு எந்த இடங்களில் எவ்வளவு வீடுகள் என்ற விவரம் இங்கே.

author-image
WebDesk
New Update
2022-ல் வீடு வாங்கணுமா? பெரிய நகரங்களில் லட்சக் கணக்கில் ரெடியாகும் ஃப்ளாட்ஸ்!

Planning to buy a home in 2022? These cities have maximum under construction flats to be completed this year: நாட்டின் முக்கிய ஏழு நகரங்களில் இந்த ஆண்டு 3.85 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய அனாரோக் (ANAROCK) ஆராய்ச்சி தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டில் 2.14 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இரண்டாவது கொரோனா அலைகள் இருந்தபோதிலும், 2021 ஆம் ஆண்டில் டாப் ஏழு இந்திய நகரங்களில் சுமார் 2.78 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

Advertisment

2021 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட மொத்த வீடுகளில், அதிகபட்சமாக டெல்லி என்சிஆர் பகுதியில் சுமார் 86,590 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது 2020 ஆம் ஆண்டில் தோராயமாக 47,160 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதை விட கிட்டத்தட்ட 84% அதிகமாகும்.

அனாரோக் தரவுகளின்படி,

மும்பை பெருநகரப் பகுதியில் (MMR), தோராயமாக. 2021ல் 70,490 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன, இது 2020ல் 54,720 வீடுகளாக இருந்தது.

2021ல் புனேயில் சுமார் 46,090 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன, இது 2020ல் 40,840 வீடுகளாக இருந்தது.

பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னையில் மொத்தமாக 2021ல் ஏறக்குறைய 63,870 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன, இது 2020ல் 59,730 ஆக இருந்தது.

கொல்கத்தாவில் 2020ல் 11,920 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், 2021ல் 11,620 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்: IRCTC Booking: ரயிலில் தட்கல் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகணுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!

ஆராய்ச்சி முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த ANAROCK குழுமத்தின் தலைவர் அனுஜ் பூரி, “2022 ஆம் ஆண்டில் டாப் 7 நகரங்களில் 3.85 லட்சம் வீடுகள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பதையும் எங்கள் தரவு சுட்டிக்காட்டுகிறது. நடந்துகொண்டிருக்கும் மூன்றாவது அலையின் போது குறைந்த பாதிப்பு இருக்கும் என்று நம்புகிறேன், 2022 இல் பெரும்பாலான திட்டங்கள் அட்டவணைப்படி முடிக்கப்படலாம். நிச்சயமாக, டெவலப்பர்கள் புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கு முன்பு, ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டங்களை முடிக்க உறுதிபூண்டுள்ளனர்.

2022 இல் விநியோகத்திற்கு வீடுகள் தயார்

டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் 2022 இல் அதிக வீடுகள் கட்டி முடிக்கப்படலாம். தற்போது டெல்லி-என்.சி.ஆரில் 4.22 லட்சம் வீடுகள் பல்வேறு கட்ட கட்டுமானத்தில் உள்ளன. இதில், சுமார் 29% வீடுகள் 2022 இலும், 2023ல் 34%, 2024ல் 18%, 2024க்கு பிறகு 18% வீடுகளின் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையில், தோராயமாக 4.26 லட்சம் வீடுகள் கட்டுமானத்தில் உள்ளன, இதில் தோராயமாக 2022 இல் 17%, 2023 இல் 24%, 2024 இல் 20% மற்றும் 2024 க்கு பிறகு 39% கட்டி முடிக்கப்படும்

புனேவில் சுமார். 2.39 லட்சம் வீடுகள் கட்டுமானத்தில் உள்ளன, இதில் தோராயமாக 2022 இல் 31%, 2023 இல் 27%, 2024 இல் 18% மற்றும் 2024 க்கு பிறகு 24% கட்டி முடிக்கப்படும்

பெங்களூரில், சுமார். 1.92 லட்சம் வீடுகள் கட்டுமானத்தில் உள்ளன, இதில் தோராயமாக 2022 இல் 29%  2023 இல், 28% 2024ல் 19%, 2024க்கு பிறகு 24% கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,

ஹைதராபாத்தில், சுமார். 1.03 லட்சம் வீடுகள் கட்டுமானத்தில் உள்ளன, இதில் தோராயமாக. 2022 இல் 16%, 2023 இல் 16%, 2024 இல் 15% மற்றும் 2024 க்கு பிறகு 53% கட்டி முடிக்கப்பட உள்ளது. (நகரில் பெரும்பாலான பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்ததால், கட்டி முடிக்கப்படும் காலவரிசை பாதிக்கு மேல் 2024 க்கு பிறகு உள்ளது)

கொல்கத்தாவில், தோராயமாக. 84,400 வீடுகள் கட்டுமானத்தில் உள்ளன, இதில் தோராயமாக. 33% 2022l, 2023 இல் 29%, 2024 இல் 20% மற்றும் 2024 க்கு பிறகு 17% கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தோராயமாக முதல் 7 நகரங்களில் மிகக் குறைவான கட்டுமானப் பங்குகளை சென்னை கொண்டுள்ளது. 48,120 வீடுகள், இதில் தோராயமாக 2022 இல் 36%, 2023 இல் 29%, 2024 இல் 17% மற்றும் 2024 இல் 18% கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment