Advertisment

வங்கி, போஸ்ட் ஆபீஸ் கஸ்டமர்களே... உங்கள் வீட்டு வாசலில் பணம் பெறும் வசதி வந்தாச்சு!

Doorstep cash delivery: ஆதார் எண்ணைக்கொண்டு பணம் செலுத்தும் வழிமுறையே AEPS என்பதாகும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rural postal life insurance, gram suraksha scheme

கொரோனா மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வீடுகளை விட்டு வெளியே வந்து பணம் எடுப்பது சிரமமாக உள்ளது. இந்த கடினமான சூழ்நிலையில் தபால் அலுவலகம் மக்களுக்கு உதவ முன் வந்துள்ளது. இந்தியா போஸ்ட் மக்களின் வீட்டு வாசலில் பணத்தை விநியோகித்து வருகிறது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஆதாருடன் இணைக்கப்பட்ட கட்டண முறை(AEPS) மூலம் இந்த வசதியை போஸ்ட் ஆபிஸ் மேற்கொள்கிறது. இந்த நன்மைகளை பெற்று வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்.

Advertisment

ஆதாருடன் இணைக்கப்பட்ட கட்டண முறை என்றால் என்ன?

ஆதார் எண்ணைக்கொண்டு பணம் செலுத்தும் வழிமுறையே AEPS என்பதாகும். வங்கி, வாடிக்கையாளருக்கு அவரது ஆதார் எண்களை அடையாளமாகக் கொண்டு அவரது கணக்கிலிருந்து பணத்தை அனுப்புவதற்கு அதிகாரமளிக்கும் சேவையாகும். இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அஞ்சலகத்திலேயே ஆதார் மூலமான பரிவர்த்தனைகள் (AePS) வாயிலாக எந்தவொரு வங்கியின் வாடிக்கையாளரும், தங்களது ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து பணம் பெற முடியும்.

சேவைகள் என்ன?

இதன் மூலம் பேலன்ஸ் தொகை பற்றி அறிந்துகொள்ளலாம், ஆதார் to ஆதார் பணப் பரிமாற்றம், பணம் எடுத்தல் மற்றும் மினி ஸ்டேட்மேண்ட் பெறலாம்.

நன்மைகளை பெறுவது எப்படி?

வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட கட்டண முறை AEPS வசதி பெற்றிருக்க வேண்டும். ஆதார் அட்டை வைத்திருப்பவரின் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி மட்டுமே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி வீட்டு வாசலில் வங்கி வசதியை வழங்குகிறது. அஞ்சல் ஊழியர்கள் உங்கள் வீட்டிற்கு வருவார்கள். நீங்கள் வங்கிக் கணக்கைத் open செய்யலாம், பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம், டெபாசிட் செய்யலாம் மற்றும் பணத்தை எடுக்கலாம், ரீசார்ஜ் செய்யலாம் அல்லது பில்கள் செலுத்தலாம். பிற வங்கிகளுடன் வைத்திருக்கும் உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகளையும் அணுகலாம்.

போஸ்ட் ஆபிஸ் மூலம் வீட்டு வாசலில் பணம் பெறுவதி எப்படி?

வாடிக்கையாளர் 155299 என்ற எண் மூலம் தொடர்பு மையத்தை அழைத்து பதிவு செய்ய வேண்டும்

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும்

இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் ஊழியர்களுக்கு வருகை விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும்.

உங்கள் வங்கி கணக்கு எண் அல்லது மொபைல் எண்ணை வழங்க வேண்டும், அல்லது உங்கள் QR அட்டையை டோர்ஸ்டெப் பிரதிநிதிக்கு காண்பிக்க வேண்டும்.

பணம் எடுத்தல், மினி ஸ்டேட்மென்ட், பேலன்ஸ் தெரிந்துகொள்வதற்கு போன்ற சேவைகள் மற்றும் பணப்பரிவர்த்தனைகளுக்கு டோர்ஸ்டெப் வங்கி கட்டணங்களை IPPB தள்ளுபடி செய்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India Post Payments Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment