post office savings account post office account : வயது வந்த ஒரு நபர் தனியாகவோ அல்லது இரண்டு நபர்கள் கூட்டாகவோ சேமிப்புக் கணக்கைத் திறக்க முடியும். மைனர் சார்பாக அவரது பாதுகாவலர், 10 வயதிற்கு மேற்பட்ட ஒரு மைனர் தனது பெயரில் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கைத் திறக்க முடியும். ஒரு தனிநபரால் ஒரு கணக்கை மட்டுமே திறக்க முடியும்
ஒரு தபால் நிலைய சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச டெபாசிட் தொகை ரூ.500. ஒரு நிதியாண்டின் முடிவில் இந்த குறைந்தபட்ச டெபாசிட் தொகை கணக்கில் இல்லாவிட்டால் ரூ.100 அபராதத் தொகை பிடித்தம் செய்யப்படும். ஒவ்வொரு நிதியாண்டின் கடைசி நாளிலும் இத்தொகை பிடிக்கப்படும். ஒருவேளை அந்தக் கணக்கில் பணமே இல்லாவிட்டால் அந்தக் கணக்கு மூடப்பட்டுவிடும். அதேபோல, கணக்கிலிருந்து குறைந்தபட்சமாக ரூ.50 வித்டிரா செய்யலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது.
ஒரு மாதத்தின் 10ஆம் நாள் மற்றும் மாதத்தின் முடிவில் கணக்கில் உள்ள குறைந்தபட்ச தொகையை அடிப்படையாகக் கொண்டு வட்டி கணக்கிடப்படுகிறது. எனவே இக்காலத்தில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.500 இல்லாவிட்டால் வட்டி எதுவும் கிடைக்காது. மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள வட்டித் தொகைப்படி ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் வட்டிப் பணம் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். கணக்கு மூடப்படும்போது அந்த மாதம் வரையில் உள்ள வட்டிப் பணம் வழங்கப்படும்.
ஒருவேளை குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.500 இல்லாவிட்டால் வட்டி எதுவும் கிடைக்காது. மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள வட்டித் தொகைப்படி ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் வட்டிப் பணம் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். கணக்கு மூடப்படும்போது அந்த மாதம் வரையில் உள்ள வட்டிப் பணம் வழங்கப்படும். ஆண்டுக்கு 4 சதவீத வட்டி லாபம் கிடைக்கிறது.