post office savings online : வங்கியில் பணம் போட்டால் குறிப்பிட்ட சதவிகிதம் வட்டி தருவார்கள். ஆனால், இப்போது நம்மிடமே பணம் பறிக்கிறார்கள்.பெரும்பாலும் பொதுமக்கள் வங்கியையே சேமிப்புத் திட்டங்களில் முதலீடு மேற்கொள்ள நாடுகின்றனர். ஆனால், வங்கியைவிட அதிக வட்டி, அதிக லாபம் தரும் அஞ்சல் சேமிப்புத் திட்டங்களைப் பற்றி பலருக்கும் தெரிவதில்லை.
அஞ்சல் துறை பல நல்ல சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. இது மென்மேலும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கும் நோக்கில், பயன் தரும் வகையில் பல திட்டங்களை அது உருவாக்கியுள்ளது. இன்று அஞ்சல் துறையில் இருக்கும் மிகச் சிறப்பு சேமிப்பு திட்டம் பற்றி தான் தெரிந்துக் கொள்ள போறீர்கள்.
112 மாதங்களில் பணம் இரட்டிப்பாக கிஸான் விகாஸ் பத்திரம் திட்டம். ஆண்டுக்கு 7.7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. எந்த உச்ச வரம்பும் இல்லை. கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் 18 வயது நிரம்பிய அனைவரும் தனியாக அல்லது கூட்டாக முதலீட்டினை தொடங்கலாம்.கிசான் விகாஸ் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்று அடையாள மற்றும் முகவரி ஆவணங்களைச் சமர்ப்பித்துச் சேமிப்பைத் துவங்கலாம். அதிக மதிப்பிலான தொகையினை முதலீடு செய்யும் போது பான் எண் கட்டாயம் ஆகும்.
இந்தத் திட்டத்தில் உள்ள பணம் 112 மாதங்களில் இரட்டிப்பாகி கைகளுக்கு முழு தொகையாக வந்து சேரும்.இந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு1,50,000 வரை வருமான வரி சட்டப் பிரிவு 80சி கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
அதிக வட்டி பெறுவது எப்படி?
நீங்கள் இன்று இந்த திட்டத்தில் ரூ .50,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அது 113 மாதங்களில் முதிர்ச்சியடைந்து தொகை அப்படியே இரட்டிப்பாகும்.இந்த திட்டத்தில் முதலீடு செய்யக்கூடிய குறைந்தபட்ச தொகை ரூ .1000.
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் வட்டி விகிதம் 7.7 சதவீதமானது. எஸ்பிஐ மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி 10 ஆண்டு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதங்களை விட அதிகமாகும்.
அதிர்ச்சி கொடுத்த கனரா வங்கி! என்ன விஷயம் தெரியுமா?
எஸ்பிஐ தற்போது 10 ஆண்டு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 6.25 சதவீதமாக வட்டி வழங்கி வருகிறது. அதே நேரத்தில் எச்.டி.எஃப்.சி வங்கியில் இந்த விகிதம் 6.9 சதவீதமாக உள்ளது. ஆனால் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் நீங்கள் சேமிக்க தொடங்கும் தொகையை பொருத்து உங்களால் வட்டி மட்டுமே 1 லட்சம் வரை பெற முடியும். அப்புறம் என்ன யோசனை? உடனே புறப்படுங்கள்.