Advertisment

Post Office: ரூ 1400 வீதம் சேமித்தால் ரூ 35 லட்சம்; இந்த ஸ்கீமை பாருங்க!

Gram Suraksha Scheme is one of the best schemes of Post Office to invest in Tamil News: கிராம் சுரக்ஷா திட்டத்தின் கீழ், ஒருவர் மாதம் ரூ.1411 முதலீடு செய்வதன் மூலம் முதிர்வு காலத்தில் சுமார் ரூ.35 லட்சம் பெறுகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Invest Rs 5100 monthly in Gram Sumangal scheme to get Rs 19 lakh in 20 years

கிராம் சுமங்கல் அஞ்சல் காப்பீடு திட்டமாகும்.

Gram Suraksha Scheme Tamil News: கிராம் சுரக்ஷா திட்டம் என்பது அஞ்சல் அலுவலகத்தின் சிறந்த திட்டங்களில் ஒன்றாகும். நீங்கள் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் ஈட்ட விரும்பினால், இந்தத் திட்டம் குறித்து அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisment

இந்த கிராம் சுரக்ஷா திட்டத்தின் கீழ், ஒருவர் மாதம் ரூ.1411 முதலீடு செய்யலாம் மற்றும் முதிர்வு காலத்தில் சுமார் ரூ.35 லட்சம் பெறலாம். இந்த திட்டம் ஒரு முழு ஆயுள் காப்பீட்டுக் பாலிசியாகவும் வருகிறது. மேலும் பாலிசியை எடுத்து ஐந்தாண்டுகளின் முடிவில் எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றுவதற்கான விருப்பத்தின் கூடுதல் அம்சம் உள்ளது.

கிராம் சுரக்ஷா திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

இந்தத் திட்டத்தில் இணைய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது: 19-55 ஆண்டுகள் ஆகும். ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.

இந்தத் திட்டத்தில் பிரீமியங்களை ஒவ்வொரு மாதமும், காலாண்டும், ஆறு மாதம் மற்றும் ஆண்டு அடிப்படையில் செலுத்தலாம்.

19 வயது முதலீட்டாளர் 55 வயது வரை ரூ.10 லட்சத்தை முதலீடு செய்ய விரும்பினால், அவர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1515 பிரீமியம் செலுத்த வேண்டும்.

58 வயது வரை முதலீடு செய்ய அவர்கள் ரூ.1463 டெபாசிட் செய்ய வேண்டும் மற்றும் 60 வயது வரை, முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் பிரீமியமாக ரூ.1411 டெபாசிட் செய்ய வேண்டும்.

55 வயதில் முதலீட்டாளர் ரூ.31.60 லட்சமும், 58 வயதில் ரூ.33.40 லட்சமும், 60 வயதில் முதிர்வுத் தொகையாக ரூ.34.60 லட்சமும் பெறுவார்கள்.

கடன் உதவி

அஞ்சல் அலுவலக கிராம் சுரக்ஷா திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் கடன் வசதி உட்பட பல நன்மைகளைப் பெறுவீர்கள். இருப்பினும், திட்டத்தில் 4 ஆண்டுகள் முதலீடு செய்த பிறகு மட்டுமே இது கிடைக்கும்.

பணத்தை மாதந்தோறும், காலாண்டு அல்லது ஆண்டுதோறும் டெபாசிட் செய்யலாம்.

அவசர காலங்களில், 30 நாட்கள் சலுகை காலம் அனுமதிக்கப்படுகிறது.

முதலீடு செய்த நாளில் இருந்து, பாலிசியை 3 ஆண்டுகளுக்குப் பிறகு சரண்டர் செய்யலாம்.

5 ஆண்டுகளுக்கு முன் சரணடைந்தால் போனஸுக்கு நீங்கள் தகுதி பெற மாட்டீர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Business Update 2 Tamil Business Update Post Office Scheme Post Office Post Office Savings Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment