Advertisment

PPF Scheme; மாதம் ரூ.1000 முதலீட்டில் ரூ.18 லட்சம் வருமானம்; எப்படி தெரியுமா?

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்; குறைந்த முதலீட்டில் ரூ.18 லட்சம் வருமானம்; இந்த சேமிப்பு பற்றிய முழுத் தகவல்கள் இங்கே

author-image
WebDesk
New Update
PPF Scheme; மாதம் ரூ.1000 முதலீட்டில் ரூ.18 லட்சம் வருமானம்; எப்படி தெரியுமா?

PPF scheme offers Rs.18 lakh return on Rs.1000 investment per month: உலகப் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற நிலை மற்றும் தற்போதைய தொற்றுநோய்களுக்கு மத்தியில், எதிர்காலத்திற்கான சேமிப்பு முக்கியமானது. ஒருவர் தன்னால் இயன்ற அளவு பணத்தை சேமிப்பது ஒரு விவேகமான நிதி திட்டமாகும். அத்தகைய சூழ்நிலையில், நீண்ட கால சேமிப்பில் அதிக வருமானம் தரக்கூடிய சேமிப்புத் திட்டங்கள் ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாகும். ரூ. 1,000 மாதாந்திர முதலீட்டில் ரூ. 18 லட்சத்திற்கு மேல் திரும்பப் பெறக்கூடிய அற்புத திட்டமான பிபிஎஃப் திட்டத்தைப் பற்றி இப்போது பார்ப்போம்.

Advertisment

பொது வருங்கால வைப்பு நிதி - PPF என்பது முதலீட்டிற்கு உத்தரவாதம் அளிக்கும் சேமிப்பு திட்டமாகும். PPF இல் முதலீடுகள் சரியாக செய்யப்பட்டால், முதலீட்டாளர்கள் நீண்ட காலத்திற்கு நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

PPF தற்போது 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ரூ 500 முதல் அதிகபட்சம் ரூ 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். PPF கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். கணக்கு முதிர்ச்சியடைந்தவுடன் பணத்தை திரும்பப் பெறலாம் அல்லது 5 வருடங்களுக்கு ஒருமுறை கணக்கை நீட்டிக்கலாம்.

ரூ.18 லட்சம் வருமானம் எப்படி?

15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 1,000 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் அவர்களின் டெபாசிட் தொகை ரூ.1.80 லட்சமாக மாறும். 7.1% வட்டி விகிதத்தில், நீங்கள் ரூ.1.45 லட்சம் வட்டியைப் பெறுவீர்கள், இதன் மூலம் PPF கணக்கில் உள்ள மொத்தத் தொகை ரூ.3.25 லட்சமாக இருக்கும். மாதந்தோறும் ரூ. 1,000 டெபாசிட் செய்யும் போது 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டால், இந்தத் தொகை 3.25 லட்சத்தில் இருந்து ரூ.5.32 லட்சமாக உயரும். இரண்டாவது 5 ஆண்டு நீட்டிப்பு தொகை ரூ.8.24 லட்சமாக இருக்கும். முதலீட்டின் மொத்த காலம் 30 ஆண்டுகளை எட்டுவதால், மூன்றாவது 5 ஆண்டு நீட்டிப்பு இந்த தொகையை ரூ.8.24 லட்சத்தில் இருந்து ரூ.12.36 லட்சமாக எடுக்கிறது. ஆரம்ப 15 ஆண்டு காலத்திற்கான நான்காவது நீட்டிப்பு 35 வருட முதலீட்டு காலத்திற்குப் பிறகு மொத்தத் தொகை ரூ.18.15 லட்சமாக இருக்கும்.

இதையும் படியுங்கள்: பிஎம் கிசான் 11-வது தவணை; விவசாயிகளுக்கான முக்கிய அப்டேட் இதோ…

நீங்கள் வேலைக்கு செல்லத் தொடங்கும்போது PPF இல் ரூ. 1,000 முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம், நீங்கள் உங்கள் ஓய்வூதியத்தைத் திட்டமிடத் தொடங்கும் நேரத்தில் ஒரு உத்திரவாதமான தொகை திரும்ப வருவதை உறுதி செய்யலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Ppf
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment