Advertisment

PPF Alert : பட்ஜெட் 2022ல் இப்படி ஒரு அறிவிப்பு வெளியானால், 15 வருடத்தில் 80 லட்சம் ரிட்டர்ன்ஸ் கிடைக்கும்

சுயதொழில் செய்பவர்களுக்கு, நீண்ட கால முதலீட்டு திட்டமான PPF மட்டுமே வரியில்லா வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
New Update
Bank news Tamil, money news

Public Provident Fund : இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது பி.பி.எஃப். கணக்கில் முதலீட்டிற்கான உச்ச வரம்பை ரூ. 1.5 லட்சத்தில்/ஆண்டுக்கு இருந்து அதிகமாக்கப்படலாம் என்று முதலீட்டாளர்கள் மற்றும் வரி நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த பி.பி.எஃப். திட்டமானது வருமான வரி விலக்கை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisment

ஆண்டுக்கான பி.பி.எஃப். முதலீட்டின் வரம்பு ரூ. 3 லட்சமாக வர இருக்கும் பட்ஜெட்டில் அதிகரிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பிரிவு 80சி-ஐ இந்த டெபாசிட் வரம்பிற்கும் கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

2014ம் ஆண்டுக்கு பிறகு பி.பி.எஃப். முதலீட்டு வரம்பில் எந்த விதமான மாற்றங்களையும் அரசு கொண்டு வரவில்லை. இந்த திட்டத்தில் மாற்றங்கள் தேவை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா (ICAI) படி, PPF வைப்பு வரம்பு உயர்த்தப்படுவது தற்போதைய காலத்தில் அவசியமானது, ஏனெனில் இது சுயதொழில் செய்பவர்களுக்காக நடைமுறையில் இருக்கும் பாதுகாப்பான மற்றும் வரி-விலக்கு பெறப்பட்ட ஒரே ஒரு சேமிப்பு திட்டமாகும்.

சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு பல்வேறு வருங்கால வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பம் இருந்தாலும், சுயதொழில் செய்பவர்களுக்கு, நீண்ட கால முதலீட்டு திட்டமான PPF மட்டுமே வரியில்லா வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 3 லட்சமாக வரம்பு உயர்த்தப்பட்டால் என்ன நிகழும்?

தற்போது இருக்கும் வட்டி விகிதமே பி.பி.எப்ஃ. திட்டடத்திற்கு தொடரும் என்று வைத்துக் கொள்வோம். 7.1% வட்டியுடன் வாடிக்கையாளர்கள் 15 ஆண்டுகளில் ரூ. 40 லட்சத்தை பெற இயலும். 15 ஆண்டுகால மெச்சூரிட்டி முடிவுற்ற பிறகு மேலும் 5 ஆண்டு காலத்திற்கு முதலீட்டை நீட்டித்துக் கொள்ள இயலும்.

இந்த உச்சவரம்பு ரூ. 1.5 லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்படும் பட்சத்தில் 15 ஆண்டுகளில் ரூ. 80 லட்சத்தை திரும்பப் பெற இயலும். இது செயல்பாட்டிற்கு வர பல்வேறு ஒழுங்குமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டிய நிலை ஏற்படலாம்.

பிபிஎஃப் முதலீட்டாளர்கள் மற்றும் வரி நிபுணர்களின் நீண்டகால கோரிக்கையை வரவிருக்கும் பட்ஜெட் நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

2014ம் ஆண்டுக்கு முன்பு இந்த வரம்பு ரூ. 1 லட்சமாக இருந்தது. பிறகு இது ரூ.1.50 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. பணவீக்கம் மற்றும் மக்கள் வயதாகும்போது அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பின் தேவையைக் கருத்தில் கொண்டு, வரம்பு பொருத்தமானதாகக் கருதப்படுவதால் மேலும் அதிகரிக்கப்படலாம் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Public Provident Fund
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment