Advertisment

சாதாரண செல்போன்களுக்கும் யூபிஐ வந்தாச்சு… இன்டர்நெட் இல்லாமலே பணம் அனுப்பலாம்

UPI 123PAY புதிய சர்வீஸ் மூலம் 40 கோடி பியூச்சர் வாடிக்கையாளர்கள் பலன் பெறுவார்கள். இனி இன்டர்நெட் வசதி இல்லாமலே பணம் அனுப்ப முடியும். எல்லா நாட்களும், 24 மணி நேரமும் இந்த யூபிஐ சேவையை பயனர்கள் பயன்படுத்த முடியும்.

author-image
WebDesk
New Update
சாதாரண செல்போன்களுக்கும் யூபிஐ வந்தாச்சு… இன்டர்நெட் இல்லாமலே பணம் அனுப்பலாம்

இந்தியாவில் யூபிஐ பரிவர்த்தனையின் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாக அதிகளவில் உள்ளது. குறிப்பாக, பணமதிப்பிழப்பு காலத்தின் அதன் பயன்பாடு அசுர வளர்ச்சியை எட்டியது. தற்போது 10 ரூபாய் பொருளை வாங்கவும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் காலத்திற்கு முன்னேறியுள்ளோம். ஆனால், டிஜிட்டல் பணப்பரிவரத்தனைக்கு ஸ்மார்ட்போன் அவசியம் என்கிற கட்டாயம் இருந்தது. இதனால், ஸ்மார்ட்போன் வாங்க முடியாதவர்களும், பயன்படுத்க தெரியாதோர்களும் யூபிஐ பேமெண்ட் வசதியின்றி தவித்து வந்தனர்.

Advertisment

இதனை கருத்தில் கொண்டு, பியூச்சர் போன்களுக்கு யூபிஐ பேமெண்ட் சேவையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிமுகப்படுத்தியுள்ளார்.

UPI 123PAY என்கிற புதிய சர்வீஸ் மூலம் 40 கோடி பியூச்சர் வாடிக்கையாளர்கள் பலன் பெறுவார்கள் என கருதப்படுகிறது. இந்த போன்களில் இன்டர்நெட் வசதி இல்லாமலே யூபிஐ மூலம் பணம் அனுப்ப முடியும். எல்லா நாட்களும், 24 மணி நேரமும் இந்த யூபிஐ சேவையை சாதாரண போன் பயனர்கள் பயன்படுத்த முடியும்.

இதுகுறித்து அறிமுக நிகழ்ச்சியில் பேசிய தாஸ், "UPI 123PAY இன் அறிமுகமானது, இதுவரை டிஜிட்டல் பேமெண்ட்ஸ் தளத்திலிருந்து தள்ளியிருந்த சமூகத்தை எளிதாக இதனை பயன்படுத்த வைக்கும் முயற்சியாகும்.இது நமது பொருளாதாரத்தில் பெரிய அளவிலான நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிக்கிறது என்றார்.

பியூச்சர் போன்களில் UPI 123PAY வாயிலாக பணம் செலுத்த வெறும் மூன்று ஸ்டேப்ஸ் மட்டுமே ஆகும்.

இந்த போன்களில் நான்கு தொழில்நுட்பங்கள் அடிப்படையில் பரிவர்த்தனை நடைபெறுகிறது. IVR நம்பரை அழைப்பது, செயலி வோர்க்ஆகும் பியூச்சர் போன், மிஸ்ஸிடு கால் முறை, பிராக்ஸிமிட்டி சவுண்ட் அடிப்படையிலான பேமெண்ட் வழியாகவும் பண மேற்கொள்ளலாம்.

இதனை பயன்படுத்தி நண்பர்களுக்கு பணம் அனுப்புவது, பில்களுக்கு பணம் செலுத்துவது, மொபைல் பில் செலுத்துவது, வாகனங்களுக்கு பாஸ்ட் டேக் ரிசார்ஜ் செய்வது மட்டுமின்றி வங்கி கணக்கின் பேலன்ஸை தெரிந்துகொள்ளலாம். மேலும் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்குகளை இணைப்பது மட்டுமின்றி UPI பின்களை மாற்றவும் செய்யலாம்.

இதுதவிர, ரிசடிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கான 24x7 ஹெல்ப்லைனையும் ர்வ் வங்கி ஆளுநர் தொடங்கினார். இது இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (NPCI) அமைக்கப்பட்டுள்ளது. 'Digisaathi'எனப் பெயரிடப்பட்ட ஹெல்ப்லைன் அமைப்பு, அனைத்து விதமான பயனாளர்கள் சந்தேகங்களை இணையதளத்திலோ, சாட்போட் வாயிலாக தீர்த்து வைக்கும்.

பயனாளர்கள் சந்தேகங்களை கேட்க www.Digisaathi.Info தளத்தை பார்வையிடலாம் அல்லது 14431 மற்றும் 1800 891 3333 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு கேள்விகளை கேட்கலாம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Upi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment