புதிய ரூ.200 நோட்டுகள் அச்சடிக்கும் பணிகள் தொடக்கம்!

புதிய ரூ.200 நோட்டுகள் அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த வருடம் நவம்பர் மாதம் புழக்கத்தில் இருந்த ரூ.500 நோட்டுகள், ரூ.1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக, கடுமையான பிரச்சனைகளை மக்கள் சந்திக்க வேண்டிய சூல்நிலை ஏற்பட்டது. இதற்கு மாற்றாக புதிய சிறப்பம்சங்கள் கொண்ட ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி புதிய ரூ.200 நோட்டுகளை அச்சடிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. எனினும், இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தற்போதைய நிலையில், ரூ.1000 நோட்டுகள் புழக்கத்தில் இல்லை என்பதால், ரிசர்வ் வங்கி ரூ.200 நோட்டுகளை அச்சடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

×Close
×Close