2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. தொடர்ந்து, செப்டம்பர் 30,2023க்குள் அவற்றை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. எனினும் ரூ.2,000 நோட்டுகள் செல்லும்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் மத்திய வங்கி, “இந்திய ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டு கொள்கையின்படி ₹2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், ரூபாய் 2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும். இதில் பொதுமக்களுக்கு போதுமான நேரத்தை பொதுமக்கள் வழங்கவும், அனைத்து வங்கிகளிலும் செப்டம்பர் 30, 2023 வரை மாற்றிக் கொள்ளலாம்.
இந்த நடவடிக்கையை விளக்கிய ரிசர்வ் வங்கி, ரூ.2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் சுமார் 89% மார்ச் 2017க்கு முன் வெளியிடப்பட்டது. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புழக்கத்தில் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, மார்ச் 31, 2018 அன்று (புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 37.3%) உச்சத்தில் இருந்த ₹6.73 லட்சம் கோடியிலிருந்து ₹3.62 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது, இது மார்ச் 31, 2023 அன்று புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 10.8% மட்டுமே ஆகும்.
இந்த மதிப்பு பொதுவாக பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் கவனிக்கப்படுகிறது. மேலும், பொதுமக்களின் நாணயத் தேவையைப் பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பு தொடர்ந்து போதுமானதாக உள்ளது.
ஆகவே, பொதுமக்கள் ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம் அல்லது எந்த வங்கிக் கிளையிலும் மற்ற வகை ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, செயல்பாட்டு வசதிக்காகவும், வங்கிக் கிளைகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும், ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை மற்ற மதிப்புகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றுவது மே 23, 2023 முதல் தொடங்குகிறது.
மேலும், ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் மே 23 முதல் ரூ.2,000 நோட்டுகளை ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை மாற்றிக்கொள்ளும் வசதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 2016 இல் ரூ.1,000 மற்றும் பழைய ரூ.500 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ரூ.2,000 மதிப்புள்ள கரன்சி நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில், 2018-19ஆம் ஆண்டில் ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது ஏற்கனவே நிறுத்தப்பட்டது.
மார்ச் மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின்படி, 2017 மார்ச் இறுதியிலும், 2022 மார்ச் இறுதி வரையிலும் புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.2,000 மதிப்பிலான நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.9.512 லட்சம் கோடி மற்றும் ரூ.27.057 லட்சம் கோடி ஆகும்.
இதற்கிடையில், ஏடிஎம்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை நிரப்பக்கூடாது என்று வங்கிகளுக்கு எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“