Advertisment

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் வந்த Yes Bank - ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க அனுமதி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
RBI Yes Bank withdrawal limit capped at Rs 50,000

RBI Yes Bank withdrawal limit capped at Rs 50,000

வாராக்கடன் அதிகரித்தால் தனியார் வங்கியான ‘Yes Bank' கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வந்த நிலையில் அதன் நிர்வாகம் முழுவதும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ் பேங்க்கினை நிர்வகிக்க எஸ்.பி.ஐ வங்கியின் முன்னாள் அலுலரான பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனியார் வங்கியான ‘எஸ் பேங்க்' ரிசர்வ் வங்கியின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கடன்சுமையில் இருந்து மீட்டெடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. எஸ் பேங்க்கின் நிர்வாகக் குழு முழுமையாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகிறது. வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் அதிலிருந்து ரூ. 50,000 வரையே எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.

PPF குறித்து தெரிந்து கொள்ள இவ்வளவு இருக்கிறதா?

மருத்துவம் மற்றும் திருமணம் உள்ளிட்ட அவசர தேவைக்களுக்கு 50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுக்க வேண்டுமென்றால் வங்கி மேலாளரிடம் தெரிவித்து அவரது அனுமதியுடன் பணத்தை பெற்றுக்கொள்ளாம். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த அறிவிப்பானது உடனடியாக அமலுக்கு வருகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில், உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ், எஸ் வங்கிக்கு எதிர்மறையான மதிப்பீடுகள் கொடுத்திருந்தது. அதன் சொத்து மதிப்பு குறைந்து வருவது குறித்த தனது கவலைகளை வெளிப்படுத்தியது.

பிரதான குடியிருப்பு சந்தைகளில் மோசமான வளர்ச்சியை எட்டிய சொத்து மதிப்பு

Rbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment