Advertisment

8.5% வட்டி: புதிய ஃபிக்ஸட் டெபாசிட் அறிமுகம்

ஆர்.பி.எல். வங்கி வழக்கமான குடிமக்களுக்கு ரூ. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு 3.50% முதல் 7.80% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.

author-image
WebDesk
Jun 04, 2023 13:44 IST
Fixed deposit rates for senior citizens

பொதுவாக வங்கிகள் ரூ.2 கோடிக்கும் கீழ் ஃபிக்ஸட் டெபாசிட் அதற்கு மேல் உள்ள டெபாசிட்களுக்கு என்று தனித்தனி வட்டியை விதிக்கின்றன.

ஆர்.பி.எல். (RBL) வங்கி புதிய ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வங்கி வழக்கமான டெபாசிட்டுகளுக்கு மேல் 20 bps அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.

மேலும், மூத்த குடிமக்கள், மிக மூத்த குடிமக்கள் முறையே 50 bps மற்றும் 75 bps அதிக வட்டி விகிதங்களைப் பெறுகின்றனர். இதுமட்டுமின்றி, இந்தப் டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்ச டெபாசிட் மதிப்பு ரூ. 50 லட்சம் மற்றும் அதிகபட்ச வைப்புத் தொகை ரூ. 2 கோடி ஆகும்.

Advertisment

இந்த நிலையில், ஜூன் 1, 2023 முதல் RBL வங்கி தனது நிலையான வைப்பு வட்டி விகிதங்களைத் திருத்தி உள்ளது.

சமீபத்திய எஃப்.டி வட்டி விகிதங்கள்

ஆர்.பி.எல். வங்கி வழக்கமான குடிமக்களுக்கு ரூ. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கு 3.50% முதல் 7.80% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.

டெபாசிட் காலம் வட்டி சீனியர் சூப்பர் சீனியர்
12-15 மாதங்கள் 7.20 7.70 7.95
453 நாள்கள் 8.00% 8.50% 8.75%
24 மாதங்கள் < 36 மாதங்கள் 7.70% 8.20% 8.45%
36 மாதங்கள் முதல் 60 மாதங்கள் 1 நாள் வரை 7.30% 7.80% 8.05%
60 மாதம் 2 நாள்கள் முதல் 240 மாதங்கள் வரை 7.20% 7.70% 7.95%
ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி

மூத்த குடிமக்கள் (60 வயது முதல் 80 வயது வரை) கூடுதல் வட்டி விகிதமான 0.50% p.a பெறுவார்கள். அதேபோல், சூப்பர் மூத்த குடிமக்கள் (80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) கூடுதல் வட்டி விகிதமான 0.75% p.a கூடுதலாக பெறுவார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment