scorecardresearch

சீனியர் சிட்டிசன்ஸ் ஆர்.டி., ஸ்கீம்.. எஸ்.பி.ஐ, போஸ்ட் ஆபிஸ்.. எதில் பெஸ்ட் வட்டி

வங்கி வைப்பு விகிதங்கள் சமீபத்தில் வட்டியை அதிகரித்து வருவதால், தொடர் வைப்புத் திட்டங்களும் கவர்ச்சிகரமான வட்டியை வழங்க முன்வந்துள்ளன.

PSU bank fixed deposit interest rates
ஃபிக்ஸட் டெபாசிட் ரிட்டன் தொடர்பாக 18 வங்கிகளின் பட்டியல் இங்கே உள்ளது.

தொடர் வைப்புத் திட்ட கணக்கு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்வதன் மூலம் வட்டி வருமானத்தைப் பெறலாம்.
தற்போது, வங்கி வைப்பு விகிதங்கள் சமீபத்தில் வட்டியை அதிகரித்து வருவதால், தொடர் வைப்புத் திட்டங்களும் கவர்ச்சிகரமான வட்டிக்கு மாறியுள்ளன.

தொடர் வைப்புத்தொகை கணக்கு வைத்திருப்பவர்கள் மாத அடிப்படையில் மிகச் சிறிய தொகைகளை டெபாசிட் செய்ய அனுமதிப்பதால், இது ஏழை- எளிய மக்களுக்கு பிரபலமான திட்டமாகும்.
இதற்கிடையில் தற்போது பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஃபிக்ஸட் டெபாசிட்கள் மற்றும் ஆர்.டி. (RD)கள் இரண்டிற்கும் ஒரே மாதிரியான வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

அந்த வகையில், மூத்த குடிமக்களுக்கான எஸ்.பி.ஐ (SBI), தபால் அலுவலகம் ஆர்.டி வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.

எஸ்.பி.ஐ ஆர்.டி வட்டி விகிதங்கள்

எஸ்பிஐ குறைந்தபட்சம் ரூ.100 முதல் ஆர்.டி. கணக்குகளில் டெபாசிட் செய்ய அனுமதிக்கிறது. அதன் பிறகு ரூ.10 இன் மடங்குகளில் RD கணக்குகளில் முதலீடு செய்யலாம்.
மேலும், எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கான RD வட்டி விகிதங்கள், பொது மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வங்கி வழங்கும் கால வைப்பு விகிதங்கள் போலவே இருக்கும்.

எனவே, மூத்த குடிமக்கள் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஆர்டிகளில் 7.5% வரை வட்டி பெறலாம். இதே விகிதம் 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான RD க்கும் பொருந்தும்.
1 முதல் 2 ஆண்டுகள் வரையிலான RD இல், SBI 7.3% வட்டியை வழங்குகிறது.

போஸ்ட் ஆபிஸ் ஆர்.டி. சிறு சேமிப்பு திட்டம்

தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கில் குறைந்தபட்சம் ரூ.100 டெபாசிட் செய்யவும், அதன்பின் ரூ.10 இன் மடங்குகளாகவும் சேமிக்கலாம்.
தபால் அலுவலக வாடிக்கையாளர்களுக்கான RD வட்டி விகிதம் ஜனவரி 1, 2023 முதல் 5.8% (காலாண்டு கூட்டுத்தொகை) ஆகும். அஞ்சலக RD கணக்கு கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Rd interest rates for senior citizens by sbi vs post office