Unity Bank Recurring Deposit, Fixed Deposit Interest Rate Hike 2023: யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் (யூனிட்டி பேங்க்) டெர்ம் டெபாசிட்டுகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.
வங்கி இப்போது மூத்த குடிமக்களுக்கு 1001 நாட்களுக்கு முதலீடு செய்யப்படும் நிலையான வைப்புகளில் 9.50% வட்டி வழங்குகிறது.
அதேசமயம் மற்ற முதலீட்டாளர்களுக்கு 9.00% வட்டி வழங்கப்படுகிறது.
கூடுதலாக, 181 – 201 நாட்கள் மற்றும் 501 நாட்களுக்கு, யூனிட்டி வங்கி மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 9.25% மற்றும் பொது முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 8.75% சிறப்பு வட்டி விகிதத்தை வழங்குகிறது.
சேமிப்புக் கணக்குகளில், யூனிட்டி வங்கி ரூ. 1 லட்சத்துக்கும் மேலான டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 7% வட்டியும், ரூ. 1 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 6% வட்டியும் வழங்குகிறது.
யூனிட்டி வங்கி நிலையான வைப்பு/தொடர் வைப்பு வட்டி விகிதங்கள் 2023
காலம் | பொதுமக்கள் வட்டி | மூத்த குடிமக்கள் வட்டி |
7-14 Days | 4.50% | 4.50% |
15-45 Days | 4.75% | 4.75% |
46-60 Days | 5.25% | 5.75% |
61-90 Days | 5.50% | 6.00% |
91-164 Days | 5.75% | 6.25% |
165-180 Days | 5.75% | 6.25% |
181-201 Days | 8.75% | 9.25% |
202–364 Days | 6.75% | 7.25% |
365 Days | 7.35% | 7.85% |
1Year 1 day | 7.35% | 7.85% |
>1Year 1 day – 500 days | 7.35% | 7.85% |
501 Days | 8.75% | 9.25% |
502 Days – 18 M | 7.35% | 7.85% |
>18 M -1000 Days | 7.40% | 7.90% |
1001 Days | 9.00% | 9.50% |
1002 Days -3 Year | 7.65% | 8.15% |
>3 Year – 5 Year | 7.65% | 8.15% |
>5 Year – 10 Year | 7.00% | 7.50% |
விண்ணப்பிக்கும் முன் யூனிட்டி வங்கியின் டெபாசிட் திட்டங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
மேலும், முன்கூட்டியே திரும்பப் பெறும் டெபாசிட்டுக்கு ஒரு சதவீதம் வட்டி கழிக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/