Advertisment

ரூ2000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்: ரூ500 புழக்கம் அதிகரிப்பு

ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையின்படி, 2020 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளின் எண்ணிக்கையும் மதிப்பும் குறைந்துள்ளது என்றும் ரூ.5,00 நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
rs 2000 currency notes, rbi rs 2000 notes, reserve bank of india rbi, rbi rs 500 notes, ரூ2000 நோட்டுகள், 2000 ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கி, ரூ500 நோட்டுகள் 500 ரூபாய் நோட்டுகள், no rs 2000 notes printed in fy20, currency market news, business news, Tamil indian express business

ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையின்படி, 2020 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளின் எண்ணிக்கை மற்றும் மதிப்பு குறைந்துள்ளது என்றும் ரூ.5,00 நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

2019-20 ஆம் ஆண்டில் ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்படவில்லை என்றும் ரூ.500 நோட்டுகளில் 1,200 கோடிக்கு அச்சிடப்பட்டதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி 2018-19 நிதியாண்டில் 5 கோடிக்கு ரூ.2,000 நோட்டுகளை அச்சிட்டது.

2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில், ரூ.6,58,199 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் 32,910 லட்சம் எண்ணிகையில் புழக்கத்தில் இருந்தன. 2020 மார்ச் மாதத்தில் ரூ.2,000 நோட்டுகள் 27,398 லட்சம் எண்ணிக்கையாகவும் அதன் மதிப்பு ரூ.547,952 கோடியாக குறைந்துள்ளது.

ரூ.2,000 நோட்டுகளின் மொத்த மதிப்பில் 2018ம் ஆண்டு 37.3 சதவீதமும் 2019-ல் 31.2 சதவீதமும் புழக்கத்தில் இருந்த நிலையில், இப்போது ரூ.2,000 நோட்டுகளின் மொத்த மதிப்பில் 22.6 சதவீதம் மட்டுமே புழக்கத்தில் உள்ளது.

மற்றொருபுறம், புழக்கத்தில் உள்ள ரூ.500 நோட்டுகளின் மதிப்பு ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.10.75 லட்சம் கோடியிலிருந்த நிலையில் 2020 மார்ச் மாதத்தில் ரூ.14.72 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2019-ம் ஆண்டில் ரூ.500 நோட்டுகள் 2,15,176 என்ற எண்ணிக்கையில் இருந்து 2,94,475 லட்சம் எண்ணிக்கையாக உயர்ந்தது. ரூ.500 நோட்டுகள் இந்தியாவில் வங்கி நோட்டுகளின் மொத்த மதிப்பில் 60.8 சதவீதமாக உள்ளன. இது கடந்த ஆண்டு 51 சதவீதமாக இருந்தது.

வங்கியின் ரூபாய் நோட்டுகள் உட்செலுத்துதல் 2019-20-ம் ஆண்டில் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட 13.1 சதவீதம் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் ரூபாய் நோட்டுகள் வழங்கல் முந்தைய ஆண்டை விட 23.3 சதவீதம் குறைந்துள்ளது. முக்கியமாக கோவிட் -19 பரவலைத் தொடர்ந்து பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட இடையூறுகள்தான் இதற்கு காரணம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

2020 நிதியாண்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 14.7 சதவீதமும் மற்றும் அளவு 6.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Rbi Reserve Bank Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment