Advertisment

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரால் ஆச்சார்யா திடீர் ராஜினாமா

பொருளாதார தாராளமயமாக்கலுக்கு பிறகு, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள இளம் வயதுக்காரர் என்ற பெருமை, விரால் ஆச்சார்யாவுக்கு உண்டு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
reserve bank of india, reserve bank governor, Viral Acharya, Reserve Bank of India, Deputy governor, finance minister of india, rbi governor present, rbi deputy governor, விரால் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கி, கவர்னர் சக்திகாந்த தாஸ்

reserve bank of india, reserve bank governor, Viral Acharya, Reserve Bank of India, Deputy governor, finance minister of india, rbi governor present, rbi deputy governor, விரால் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கி, கவர்னர் சக்திகாந்த தாஸ்

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா, பதவிக்காலம் முடிய இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Advertisment

2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ரிசர்வ் வங்கி துணை கவர்னராக விரால் ஆச்சார்யா பொறுப்பேற்றார். பொருளாதார தாராளமயமாக்கலுக்கு பிறகு, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள இளம் வயதுக்காரர் என்ற பெருமை, விரால் ஆச்சார்யாவுக்கு உண்டு.

ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உர்ஜித் படேல், மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அவரது பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்தநிலையில் அவர் ராஜினாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், துணை கவர்னர் விரால் ஆச்சார்யாவும், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போதைய நிலையில் என்.எஸ்.விஸ்வநாதன். பி,பி.கனுங்கோ மற்றும் எம்.கே,ஜெயின் துணை கவர்னர்களாக உள்ளனர்.  ரிசர்வ் வங்கி, கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட பணவியல் கொள்கை ( monetary policy) விவகாரம் தொடர்பாக, கவர்னர் சக்தி காந்ததாஸிற்கும், துணை கவர்னர் விரால் ஆச்சார்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது. அதன் எதிரொலியாக, விரால் ஆச்சார்யா தற்போது தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐஐடி மும்பையில் (1995)பி.டெக் முடித்துள்ள விரால் ஆச்சார்யா, அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைகழகத்தில் நிதி மேலாண்மையில் முனைவர் பட்டம் (2001) பெற்றுள்ளார். லண்டன் பிசினஸ் ஸ்கூல், கோலர் இன்ஸ்ட்டியூட் ஆப் பிரைவேட் ஈக்விட்டி, பேங்க் ஆப் இங்கிலாந்தில் ரிசர்ச் பெல்லோ, நியூயார்க் பல்கலைகழகத்தில் பேராசிரியர் பணி என்ற பன்முகம் கொண்ட விரால் ஆச்சார்யா, 2017ம் ஆண்டு ரிசர்வ் வங்கியில் துணை கவர்னராக நியமிக்கப்ப்டடார்.

தற்போது அவர் துணை கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், மீண்டும் பல்கலைகழக பேராசிரியர் பணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரால் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுடன் இணைந்து source of inspiration என்ற பெயரில் ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Reserve Bank Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment