Advertisment

புதுப்பிக்கப்பட்ட தங்க ரதம் ரயில் - டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

தங்க ரதம் ரயிலின் இணையதளத்தின்படி, கர்நாடகத்தின் பெருமை என்ற இந்த சுற்றுலா தொகுப்பில் Adult rooming, deluxe cabin twin/double ஆகியவை ரூபாய் 2,99,130/- என்ற அளவிலும், Single Supplement rooming, deluxe cabin twin/double ரூம்கள் ரூபாய் 2,24,350/- என்ற அளவிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
புதுப்பிக்கப்பட்ட தங்க ரதம் ரயில் - டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

புதுப்பிக்கப்பட்ட தங்க ரதம் ரயில் மீண்டும் தண்டவாளங்களை தொட போகிறது. அதன் பயண நேரம் மற்றும் கட்டணங்கள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

Advertisment

ஐஆர்சிடிசி தங்க ரதம் ஆடம்பர ரயில் (IRCTC Golden Chariot luxury train) மீண்டும் ஒரு முறை தண்டவாளங்களை தொடப் போகிறது. இனி இந்தியாவில் உள்ள சுற்றுலா பயணிகள் முன் எப்போதும் இல்லாத வகையில் முற்றிலும் வித்த்யாசமான ஒரு ரயில் பயணத்தை மேற்கொள்ளலாம். கர்நாடக மாநில சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு (Karnataka State Tourism Development Corporation KSTDC) சொந்தமான தங்க ரதம் ரயில் கடந்த 2008 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த ரயில் சமீபத்தில் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தால் Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) மேலாண்மை, சந்தைப்படுத்துதல் மற்றும் செயல்பாட்டுக்காக கையகப்படுத்தப்பட்டது. முழுவதுமாக புதுப்பிக்கப்பட்ட இந்த ரயில், உற்சாகமான ஒரு-வார கால பயணத்துக்காக இந்தியன் ரயில்வேயின் தண்டவாளங்களை மீண்டும் ஒரு முறை தொடப் போகிறது. ஐஆர்சிடிசி யின் கூற்றுப்படி இந்த ரயிலுக்கு புதுப்பொலிவு ஊட்டப்பட்டுள்ளது.

கோ ஏர் விற்பனை 2020 - கோடை காலத்தில் ஒரு ஜாலி ட்ரிப்; ரூ.995 முதல்

தங்க ரதம் ஆடம்பர ரயில்: பயண அட்டவனை மற்றும் கட்டண விவரம்

இந்த ரயில் 22 மார்ச் முதல் 28 மார்ச் வரை 29 மார்ச் முதல் 4 ஏப்ரல் வரை மற்றும் 12 ஏப்ரல் முதல் 18 ஏப்ரல் வரை கர்நாடகத்தின் பெருமை என்ற பெயரில் ஒரு பயணத்தை துவங்க உள்ளது. 6 இரவுகள் மற்றும் 7 பகல் பொழுதுகளை உள்ளடக்கிய இந்த சுற்றுலா யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் இருந்து துவங்கப்போகிறது. இந்த பயணம், பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளை பல முக்கிய தலங்களான மைசூர், பந்திப்பூர் தேசிய பூங்கா, ஹம்பி, சிக்மங்களூர், Halebidu, Badami-Pattadakal-Aihole மற்றும் கோவா ஆகிய இடங்களுக்கு கூட்டி சென்றுவிட்டு மீண்டும் கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் நிறைவடையும்.

தங்க ரதம் ரயிலின் இணையதளத்தின்படி, கர்நாடகத்தின் பெருமை என்ற இந்த சுற்றுலா தொகுப்பில் Adult rooming, deluxe cabin twin/double ஆகியவை ரூபாய் 2,99,130/- என்ற அளவிலும், Single Supplement rooming, deluxe cabin twin/double ரூம்கள் ரூபாய் 2,24,350/- என்ற அளவிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆரோக்கிய சஞ்சீவனி திட்டம்: முதன்முறை காப்பீட்டாளர்கள் சற்று கவனிக்கவும்

புதுப்பிக்கப்பட்ட இந்த ஆடம்பர ரயிலில் அறைகள் மற்றும் கழிவறைகள் புதுப் பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் தொலைக்காட்சி பெட்டிகள், வைபை வசதி மற்றும் பல்வேறு வசதிகளும் CCTVs மற்றும் Fire Alarm systems உட்பட பல பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment