Advertisment

ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கான கமிஷன் குறைப்பு

RTGS, NEFT Online Fund Transfer : இந்த கட்டணங்கள் குறைக்கப்படுவதால், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
RTGS NEFT fund transfer charges, RTGS, NEFT Fund Transfer Online, RTGS, NEFT Digital Transaction

RTGS NEFT fund transfer charges

RTGS, NEFT Digital Transactions Charges  :  இன்று முதல் ஆன்லைன் பணபரிவர்த்தனைக்கு வசூலிக்கப்படும் கட்டணம் குறைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.   ஆர்.டி.ஜி.எஸ் எனப்படும் real-time gross settlement (RTGS) இந்த வகை பணப்பரிவர்த்தனை நிறைய பணம் அனுப்புவதற்காக பயன்படுத்தப்படுவது ஆகும். நேஃப்ட் மூலமாக (national electronic funds transfer (NEFT) ) நீங்கள் 2 லட்சம் வரை பணம் அனுப்பிக் கொள்ளலாம். ஆனால் இதற்கு கட்டணங்கள் கட்ட வேண்டும்.

Advertisment

RTGS NEFT fund transfer charges

ஜூன் மாதம் 6ம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் இந்த இரண்டு பணப்பரிவர்த்தனைகளுக்கான சேவைக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.1 முதல் ரூ.5 வரை நெஃப்ட் பரிவர்த்தனைக்காகவும், ஆர்.டி.ஜி.எஸ் பணப்பரிவர்த்தனைக்காக ரூ. 5 முதல் ரூ.50 வரை கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  இந்த கட்டணங்கள் குறைக்கப்படுவதால், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : எஸ்பிஐ வங்கியின் புதிய அறிவிப்பு! ஷாக்கில் வாடிக்கையாளர்கள்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment